நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 2 மாதங்களில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் அங்கம் வகித்தும் இந்தியா கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் உள்ளது.
இந்த நிலையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், “திமுகவிடம் 4 தொகுதிகள் வரை கேட்டுள்ளோம்” என்றார்.
இது குறித்து பேசிய தொல். திருமாவளவன், “நாடாளுமன்ற தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளோம்.
“3 தனித் தொகுதிகள், 1 பொதுத்தொகுதி என 4 மக்களவை தொகுதிகள் கேட்டுள்ளோம். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட விரும்பும் தொகுதிகளையும் அவர்களிடம் கேட்டுள்ளோம்” என்றார்.
முன்னதாக கடந்த சில நாள்களுக்கு முன்பு விசிக திருச்சியில் மாநாடு ஒன்று நடத்தியது. இந்த மாநாட்டில் பேசிய திருமாவளவன் பாஜகவை கடுமையாக தாக்கிப் பேசினார்.
அப்போது, “இந்த மாநாடு, பா.ஜ.க-வுக்கு எதிரான மாநாடு. ஆர்.எஸ்.எஸ்ஸூக்கு எதிரான மாநாடு. சங்பரிவார்களுக்கு எதிரான மாநாடு. சனாதன சக்திகளுக்கு எதிரான மாநாடு. பா.ஜ.க-வை ஆட்சி அதிகாரப் பீடத்தில் இருந்து விரட்டியடிக்கிற மாநாடு. தமிழ்நாடு நீங்கள் நினைப்பதுபோல் வடமாநிலங்களில் உள்ள மாநிலங்கள் போல் அல்ல. இது சிறுத்தைகளின் மாநிலம்.
பொதுவாக சிறுத்தைகள் காடுகளில்தான் இருக்கும். அதுதான் பொது வழக்கம். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும்தான் ஒவ்வொரு கிராமங்களிலும் சிறுத்தைகள் இருக்கிறார்கள். ஆட்டுக் குட்டிகள்இங்கே வந்துப்பார்த்தால் தெரியும். வாலாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.இங்கே அவர்கள் கனவுத்திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாது” என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“