பொய் புகார்களை கூறி இனி வீடியோ வெளியிட்டால், விஜயலட்சுமி பற்றிய உண்மைகளை பேசுவேன் என்று வீரலட்சுமி தெரிவித்துள்ளார்.
விஜயலட்சுமி தொடர்பாக வீரலட்சுமி பேசிய வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளாதவது: ” இந்த சுவரொட்டி உங்களுக்கு நினைவு இருக்கிறதா? 2 வருடங்களுக்கு முன்பு என்னை தொடர்பு கொண்டு’ சீமான் மீது நடவடிக்கை எடுக்கணும்’ என்று சொன்னீர்கள். நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை முற்றுகையிடச் சோன்னீர்கள். இதை செய்வதற்காக இந்த சுவரொட்டியை தயார் செய்தோம். எனது சொந்த செலவில் விளம்பரப் படுத்தினோம். ஆனால் போராட்டம் நடத்துவதற்கு முன்னால், போராட்டத்தை நிறுத்த வேண்டும் என்று சொன்னீர்கள். சிமான் என்ன வேண்டுமனாலும் செய்வார். அவர்கள் தரப்பில் இருந்து சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது என்று சொன்னீர்கள். இரண்டு வருடங்களுக்கு பிறகு நீங்களே என்னை தொடர்பு கொண்டீர்கள். இந்த முறை பின்வாங்க மாட்டேன் என்று சொன்னீர்கள். முதலில் நீங்கள் 10 முறை போன் செய்தும். நான் எடுக்கவில்லை. ஆனால் அதன் பிறகு உங்கள் அழைப்பை எடுத்து உதவுகிறேன் என்றேன்.
ஆனால் உடனடியாக சென்னை வர வேண்டாம் என்று சொன்னோன். ஆனால் நீங்கள் சென்னை வந்து ஹோட்டலில் தங்கிவிட்டு, என்னை அழைத்தீர்கள். மீண்டும் மீண்டும் அழைத்ததால் நான் போனை எடுத்தேன். நாம் தமிழர் கட்சியின் ஆட்கள் என்னை ஹோட்டலில் தங்க வேண்டாம் என்று மிரட்டுகிறார்கள் என்று சொன்னீர்கள். உங்கள் அக்காவின் நிலையை புரிந்துகொண்டு, நீங்கள் தங்கியிருந்த ஹோட்டலின் வாடகையை கட்டினேன். இதைத்தொடர்ந்து தெரிந்த உறவினர்கள் வீட்டில் தங்கச் சொன்னேன்.
ஆனால் நீங்கள் ’எனக்கு உன்னை தவிற சென்னையில் யாரும் தெரியாது’ என்று சொன்னீர்கள். எனது கணவரின் காலில் விழுந்து உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டீர்கள். இதனால் எனது சித்தப்பா வீட்டில் தங்கவைக்க ஏற்பாடு செய்தேன். அவர் உடல் நிலை முடியாத போதும், அவர் தங்கியிருக்கும் ஸ்பெஷல் ரூமை உங்களுக்கு கொடுத்தார். வீட்டில் வேலை செய்ய பல ஆட்கள் இருந்தபோதும் எனது சித்தி உங்களுக்கு சமைத்து கொடுத்தார். ஆனால் நீங்கள் உணவு கொடுக்கவில்லை என்று பேசுகிறீர்கள். இந்த நன்றியை மறந்துவிட்டு பேசுகிறீர்கள். உணவு கொடுக்கவில்லை, மிரட்டினோம், கொலை செய்து அவர் மீது பழி போட நினைத்தோம் என்று பொய் குற்றச்சாட்டை சுமத்துகிறீர்கள். சகோதரி விஜயலட்சிமி நீங்கள் செய் நன்றியை மறந்துவிட்டீர்கள். என்னை விமர்சனம் செய்தால் அதை நான் கடந்து சென்றுவிடுவோன். என்னை சார்ந்தவர்களை பற்றி விமர்சித்தால், உங்களை பற்றி பேசியே தீருவேன்.
இதனால் காவல்துறை, நீதிமன்றம் உங்கள் வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்காது. 13 வருடங்கள் கண்ணீர் சிந்தி நீங்கள் வீடியோ வெளியிட்டீர்கள், யாராது உங்கள் நிலையை புரிந்துகொண்டார்களா? எனது பக்கத்தில் நின்று நீங்கள் கண்ணீர் சிந்தியதால்தான் தமிழ் மக்கள் உங்களுக்கு ஆதரவாக உள்ளனர். இது தான் உங்களுக்கான கடைசி எச்சரிக்கை. என்னையும் என்னை சாந்தவர்களுக்கு எதிராக பொய் புகாரை தெரிவித்து வீடியோ வெளியிட்டால் தமிழ் மக்களும், சீமானும் உங்களுக்கு உதவமாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“