வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து சென்னை மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் வகையில் வினாடிக்கு 55கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
வீராணம் ஏரி :
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி வருகிறது. அதே போல் கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்ட பெருமளவில் உயர்ந்துள்ளது.
இதனால் கல்லணைக்கு வந்த தண்ணீர் கீழணைக்கு திறந்து விடப்பட்டது. இதையடுத்து கடந்த வாரம் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்தது.மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கும் வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும்.
காவிரி தண்ணீர் வராததாலும், போதிய மழை பெய்யாத காரணத்தினாலும் வீராணமேரியில் இருந்து சென்னை மக்களுக்கு குடிநீர் அனுப்படுவது கடந்த 21 ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது வீராணம், ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் சென்னை நகர பகுதிகளுக்கு குடிநீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று (11.8.18) காலை நிலவரப்படி, மொத்த நீர்மட்டமான 47.5 அடியில் 46.7 அடி நிரம்பியது. இந்த ஏரிக்கு விநாடிக்கு 950 கன அடிநீர் வந்து கொண்டிருக்கிறது.
ஏரி நிரம்பியதால், 55 கன அடி நீர் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும். வீராணம் ஏரிக்கு விரைவில் 1000 கன அடி நீர் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.