தமிழகத்தில் மட்டுமில்லாமல் கர்நாடகா, ஆந்திரா ஆகிய அண்டை மாநிலங்களில் பெய்து வரும் பருவ மழையால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு காக்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதனால், சென்னையில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து விண்ணைத் தொட்டுள்ளதால், பொதுமக்கள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ஒரு கிலோ தக்காளி விலை வேகமாக உயர்ந்து ரூ.100-க்கும் கேரட், பீன்ஸ் 1 கிலோ விலை ரூ.120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கர்நாடகா, ஆந்திரா ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்து வரும் காய்கறிகள் சென்னையின் காய்கறி தேவையை பூர்த்தி செய்பவையாக உள்ளது.
பெங்களூரு, ஊட்டி, ஒசூர், ஆந்திர மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால், காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால், சென்னை கோயம்பேடு சந்தைக்கு கர்நாடகா, ஆந்திரா ஆகிய வெளி மாநிலங்களில் இருந்து வரும் காய்கறி வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால், சென்னையில் காய்கறிகளின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. காய்கறிகள் கடுமையாக விலை உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் தக்காளி விலை வேகமாக உயர்ந்து ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கும் கேரட், பீன்ஸ் 1 கிலோ விலை ரூ.120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ அளவில் பெரிய வெங்காயம் ரூ.40, சின்ன வெங்காயம், பீட்ரூட் ரூ.90, பீன்ஸ் ரூ.80, காராமணி ரூ.60, சேனைக்கிழங்கு ரூ.70, முருங்கைக்காய் ரூ.110, சேம்பு, காலிபிளவர், பீர்க்கன் காய் ஆகியவை ரூ.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல, பச்சை மிளகாய் ரூ.100, பட்டாணி ரூ.200, இஞ்சி ரூ.150, பூண்டு ரூ.350, அவரைக்காய் ரூ.75, எலுமிச்சை ரூ.120, குடை மிளகாய் ரூ.160, சவ்சவ், முள்ளங்கி, வெண்டை, கத்திரி, நூக்கல் ஆகியவை ரூ.50, கோவைக்காய், கொத்தவரை, புடலங்காய் ஆகியவை ரூ.30 என விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“