கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், சென்னை காய்கறி சந்தைகளில் காய்கறிகளின் விலை ஏற்றம் கண்டுள்ளது. அண்டை மாநிலங்களில் சமீபத்தில் பெய்த மழையின் காரணத்தால், பயிர்கள் சேதமடைந்துள்ளது.
கோயம்பேடு மொத்த சந்தைக்கு ஒரு சில காய்கறிகளின் விலை தீவிரமாக உயர்ந்துள்ளதால், வாடிக்கையாளர்கள் மூன்றில் ஒரு பங்கு காய்கறிகளை மட்டுமே வாங்குவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும், பீன்ஸ் விலை கடுமையாக உயர்ந்து, ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், 40 - 70 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. மற்ற காய்கறிகளான வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு ஆகியவை கிலோ ஒன்றுக்கு ரூ.20 ஆகவும், கேரட் கிலோ ரூ.30 முதல் ரூ.40 ஆகவும், கத்தரி, முருங்கைக்காய் விலை கிலோவுக்கு ரூ.10 ஆகவும் குறைந்துள்ளது.
ஒரு மாதத்திற்குப் பிறகு காய்கறி விலை உயர்ந்துள்ளதால், சென்னையில் சிறு கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil