சென்னை மெரினா மற்றும் எலியட் கடற்கரைக்கு வாகனத்தில் செல்பவர்கள் இனி வாகனம் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற புதிய அறிவிப்பைச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி விடுத்த அறிவிப்பு:
சென்னை மாநகரத்தின் முக்கிய அடையாளங்களில் இடம்பெற்றிருப்பது மெரினா மற்றும் எலியட் கடற்கரை. இந்த இரண்டு கடற்கரைக்குமே சென்னை வாசிகள் பலரும் வந்து செல்வார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களில், மக்கள் வெள்ளம் அலைமோதும்.
வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் இந்த இரண்டு பீச்சையும் காணாமல் செல்லவே மாட்டார்கள். காதல், தனிமை, குடும்பம் எனப் பல உணர்வுகளைச் சுமந்து வரும் இயற்கையின் பரிசு கடற்கரை.
வாகன கட்டணம் விவரம்:
இத்தகைய பெருமை வாய்ந்த சென்னையின் அடையாளத்திற்கு நீங்கள் வாகனத்தில் சென்றால் இலவசமாகச் செல்ல முடியாது. இனி, அங்குச் செல்லும் போது, ஒரு மணி நேரத்திற்கு 4 சக்கர வாகனத்திற்கு ரூ. 20 மற்றும் 2 சக்கர வாகனத்திற்கு ரூ. 5 செலுத்த வேண்டும் என்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.