வேளாங்கண்ணி செல்ல வேண்டுமா? வார விடுமுறை தினத்தில் சிறப்பு ரயில் வசதி அறிவிப்பு

velankanni special train 2019: வேளாங்கண்ணி கோவிலுக்கு செல்ல ரயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளாகவே வைக்கப்பட்டுள்ளது.

By: January 29, 2019, 3:05:50 PM

Nagercoil to velankanni special train via tirunelveli, madurai: வேளாங்கண்ணி செல்ல வார விடுமுறை தினத்தில் சிறப்பு ரயில் வசதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த வசதியை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வார விடுமுறையையொட்டி வேளாங்கண்ணி செல்ல வசதியாக நாகர்கோவிலிருந்து மதுரை, திருச்சி வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு வாராந்திர ரயிலை ரயில்வேத்துறை இந்த வருடம் அறிவித்துள்ளது. இந்த ரயில் நாகர்கோவிலிருந்து திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டிணம் வழியாக வேளாங்கண்ணிக்கு இயக்கப்படுகிறது.

06093 எண் கொண்ட இந்த ரயில் ஒவ்வொரு சனிக்கிழமையும் நாகர்கோவிலிருந்து மாலை 5:00 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலி, மதுரை, திருச்சி வழியாக வேளாங்கண்ணிக்கு ஞாயிற்றுகிழமை அதிகாலை 03:30 மணிக்கு போய் சேருகிறது.

மறுமார்க்கம் இந்த ரயில் 06094 எண் கொண்ட ரயிலாக வேளாங்கண்ணியிலிருந்து செவ்வாய்கிழமை இரவு 8:15 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவிலுக்கு புதன்கிழமை காலை 7:55 மணிக்கு வந்து சேருகிறது.

special train to velankanni: வேளாங்கண்ணி ரயில்

கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவர்கள் புனித இடமான வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி மாதா கோவிலுக்கும் அதிகமாக செல்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் போன்ற மாவட்டங்களுக்கு வேறு நேரடி ரயில் இல்லை. எனவே தற்போது திருச்சி சென்றுவிட்டு இங்கிருந்து அடுத்த ரயிலில் பயணிக்கலாம். ஆனால் திருச்சி சென்றால் அங்கிருந்து எந்த ஒரு இணைப்பு ரயிலும் இல்லை.

இவ்வாறு இணைப்பு ரயில் கூட இல்லாத நிலையில் குமரி மாவட்டத்திலிருந்து ரயில் மார்க்கம் வேளாங்கண்ணிக்கு பயணிகள் பயணம் செய்ய முடியாமல் பேருந்துகளில் பயணம் செய்யும் நிலை உள்ளது. குமரி, நெல்லை, திருவனந்தபுரம் மாவட்ட பயணிகள் வேளாங்கண்ணி கோவிலுக்கு செல்ல ரயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளாகவே வைக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், நீடாமங்கலம், திருவாரூர், நாகப்பட்டிணம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் இரண்டு குளிர்சாதன பெட்டிகள், ஆறு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி, நான்கு முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள், இரண்டு ஊனமுற்றோர் மற்றம் சரக்கு பெட்டிகள் என மொத்தம் 14 பெட்டிகள் கொண்டு இயக்கப்படுகிறது. இந்த வாராந்திர ரயில் சேவை பிப்ரவரி 2-ம் தேதி சனிக்கிழமை துவங்கி மார்ச் மாதம் 23-ம் தேதி சனிகிழமை வரை இயக்கப்படஉள்ளது.

இந்த ரயில் ஞாயிற்றுகிழமை அதிகாலை 3:30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றுவிடுவதால் உடனடியாக அறைகளுக்கு சென்று குளித்து காலை கடன்களை முடித்து அதிகாலை 6:00 மணிக்கு நடைபெறும் தமிழ் மொழி திருப்பலியில் எளிதாக கலந்து கொள்ளமுடியும்.

கடந்த வருடம் இயக்கப்பட்ட சிறப்பு ரயில் பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று முன்பதிவு காத்திருப்போர் பட்டியல் வரை சென்றது. தற்போது இந்த வழித்தடத்தில் மீண்டும் இந்த ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது குமரி மாவட்ட பயணிகள் மத்தியில் மிகுந்த மகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது மட்டுமில்லாமல் இந்த ரயிலை அடுத்து வெளியிடப்படும் ரயில்கால அட்டவணையில் நிரந்தர ரயிலாக அறிவிக்க வேண்டும் என்று குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை வைத்திருக்கிறது.

நாகர்கோவிலிலுந்து வேளாங்கண்ணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டதை போல கொல்லம் – வேளாங்கண்ணி (வழி செங்கோட்டை) மார்க்கத்திலும் வாராந்திர சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ரயில்களிலும் எந்த மார்க்கத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரயில்வேத்துறைக்கு நல்ல வருவாய் பெற்று தருமோ அந்த வழித்தடத்தில் இயங்கும் ரயில் மட்மே நிரந்தர ரயிலாக இயக்கப்பட இருக்கிறது.

ஆகவே குமரி மாவட்ட பயணிகள் இந்த ரயிலை அதிக அளவில் பயணம் செய்து இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த சிறப்பு ரயில் சனிகிழமை நாகர்கோவிலிருந்து புறப்பட்டு வேளாங்கண்ணி சென்றுவிட்டு அங்கிருந்து இந்த ரயில் செங்கோட்டை வழியாக கொல்லம் சென்றுவிட்டு பின்னர் கொல்லத்திலிருந்து மறுமார்க்கமாக வேளாங்கண்ணி வந்து அதன்பின்னர் செவ்வாய்கிழமை வேளாங்கண்ணியிலிருந்து நாகர்கோவில் மார்க்கம் பயணம் செய்கிறது.

குமரி மாவட்ட பயணிகள் சனிகிழமை புறப்பட்டு வேளாங்கண்ணி சென்றால் சிறப்பு ரயிலில் திருப்பி வருவதற்கு செவ்வாய்கிழமை வரை ஆகின்றது. இதனால் மூன்று நாட்கள் வேளாங்கண்ணியில் தங்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் திருப்பி வருவதற்கு குமரி மாவட்ட பயணிகள் இந்த ரயிலில் பயணம் செய்ய யோசிக்கவே செய்வார்கள். ஆகையால் இதை மாற்றம் செய்ய வேண்டும்.

இதைப்போல் குழித்துறை, இரணியல், நெய்யாற்றின்கரை பகுதிகளை சார்ந்த பயணிகள் இந்த ரயிலில் பயணம் செய்ய வேண்டுமானால் நாகர்கோவில் வர வேண்டியுள்ளது. இந்த ரயிலை நாகர்கோவிலிருந்து இயக்குவதற்கு பதிலாக கொச்சுவெலியிருந்து புறப்பட்டு நாகர்கோவில் மார்க்கமாக ஒரு நாளும் அடுத்த சேவையாக கொச்சுவேலியிருந்து புறப்பட்டு செங்கோட்டை வழியாக இயக்கினால் கன்னியாகுமரி, திருவனந்தபுரம், திருநெல்வேலி, கொல்லம் என அனைத்து பகுதி பயணிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

குமரி மாவட்ட பயணிகள் வேளாங்கண்ணியிலிருந்து திருப்பி ஊருக்கு வருவதற்கு செவ்வாய்கிழமை வரை காத்திருக்காமல் ஞாயிற்றுகிழமை புறப்படும் ரயிலில் திருநெல்வேலிக்கு வந்து அங்கிருந்து நாகர்கோவில் வரும் ஏதேனும் ஒரு ரயிலில் பயணம் செய்து சொந்த ஊருக்கு வந்து விடலாம்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Velankanni special train from nagercoil tirunelveli

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X