வேலூர் மக்களவைத் தொகுதியில் உள்ள பீஞ்சமந்தி, தெண்டூர், தொங்குமலை உள்ளிட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தக் கோரி, வேலூர் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் ஏ.சி. சண்முகம், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கடங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் 69.72% வாக்குகள் பதிவானது.
தமிழ்நாட்டில் இந்த மக்களவைத் தேர்தலில், தி.மு.க கூட்டணி, அ.தி.மு.க கூட்டணி, பா.ஜ.க கூட்டணி, நா.த.க என 4 முனை போட்டி நிலவியது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தெரியவரும்.
இந்நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டுள்ள ஏ.சி. சண்முகம், வேலூர் தொகுதியில், பீஞ்சமந்தி, தெண்டூர், தொங்குமலை உள்ளிட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தக் கோரி, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பா.ஜக வேட்பாளர் ஏ.சி. சண்முகம் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “வேலூர் மக்களவைத் தொகுதியில், பீஞ்சமந்தி, தெண்டூர், தொங்குமலை, பேலம்பட்டு, ஜர்தான்கொல்லை உள்ளிட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும். இந்த 5 மலை கிராமங்களிலும் வாக்காளர்கள் மிரட்டப்பட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“