Advertisment

வேலூரில் கொரோனா சிகிச்சை பெற்ற 5 பேர் மரணம்: 'ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் அல்ல' என அரசு விளக்கம்

vellore corona patients do not die lack of oxygen: நோயாளிகள் யாரும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், மருத்துவமனையின் முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

author-image
WebDesk
New Update
coronavirus dailyr report, tamil nadu coronavirus report, today covid-19 positive, today covid-19 positive report today, கொரோனா வைரஸ், தமிழகத்தில் இன்று 5950 பேருக்கு கொரோனா தொற்று, கொரோனாவால் 125 பேர் பலி, கொரோனா செய்திகள், tamil nadu today 5950 covid-19 positive, today tamil nadu coronavirus patients deaths 125, latest tamil nadu coronavirus report, latest coronavirus news

வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். முதலில் 3 பேர் உயிரிழந்தாக தகவல் வெளியான நிலையில் தற்போது 5 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக அவர்கள் உயிரிழந்தாக, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Advertisment

இதனையடுத்து நோயாளிகள் யாரும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம்,  மருத்துவமனையின் முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ தர ஆக்ஸிஜன் அவசியம் தேவைப்படும். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில், பல்வேறு மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை புகார்கள் வருகின்றன. இந்த பிரச்சனைகளை சமாளிக்கும் பொருட்டு மத்திய அரசு மருத்துவ தர ஆக்ஸிஜன் மட்டும் தற்போது உற்பத்தி செய்ய நிறுவனங்களுக்கு அறிவுறித்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Corona Dead Lack Of Oxygen Supply
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment