அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பிரம்மாண்ட அ.தி.முக மாநாட்டுக்கு தயாராகி வரும் அதே வேளையில், மாற்றுக் கட்சி பிரமுகர்களை தி.மு.க-வில் இணைக்கும் வேட்டையிலும் நிர்வாகிகளை மும்முரமாக முடுக்கி விட்டுள்ளார்.
புதுச்சேரி சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் கூண்டோடு அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க-வில் இணைந்தனர். அ.தி.மு.க-வில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட மூத்த தலைவர் அன்வர் ராஜா மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்தார். பல்வேறு கட்சிகளில் இருந்து நிர்வாகிகளை, முக்கிய புள்ளிகளை அ.தி.மு.க-வில் இணைத்துவரும் நிலையில், வேலூர் மாவட்ட வேட்டையாக, இ.பி.எஸ் தலைமை ஆளும் கட்சியினரையே அலேக்காக தூக்கி வந்து அ.தி.மு.க-வில் இணைத்துள்ளனர்.
வேலூர் மாவட்ட அ.தி.மு.க மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்புவின் முயற்சியால், தி.மு.க-வைச் சேர்ந்த வேலூர் மாவட்ட நிர்வாகிகள் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்ததன் மூலம் வேலூர் நகர மாவட்ட அ.தி.மு.க கெத்து காட்டியுள்ளது.
டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 80 பேர் ஒரே நேரத்தில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். ஆனாலும், தி.மு.க நிர்வாகளை அலேக்காக தூக்கி வந்த வேலூர் மாவட்ட வேட்டை பெருமை அ.தி.மு.க மாவட்ட செயலாளர் அப்புவையே சாரும்.
தி.மு.க நிர்வாகிகள் ஏன் அ.தி.மு.க பக்கம் மாறினார்கள் என்றால், “சமீபத்தில் கட்சியில் இணைந்தவர்களுக்கு முக்கியத்துவமும், முன்னுரிமையும் கொடுக்கப்பட்டதால், நீண்டகாலமாக பணியாற்றிய கைகள் கைகழுவி விடப்பட்டதால் தி.மு.க தொண்டர்களிடையே அதிருப்தி இருந்தது. கட்சித் தலைமையின் சலுகைகள் அடிமட்டத் தொண்டர்களுக்கு செல்லவில்லை” இதுதான் தி.மு.க நிர்வாகிகள் அ.தி.மு.க-வுக்கு மாறிய்தற்கு காரணம் என்று எஸ்.ஆர்.கே அப்பு கூறுகிறது.
சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாநகராட்சியில் அ.தி.மு.க கவுன்சிலர் சரவணன் திட்டக்குழு பதவிகளை நிரப்புவதற்கான போட்டியில் 11 வாக்குகள் பெற்றதை அடுத்து, இந்த மாற்றத்திற்கான ஆதாரத்தை அப்பு வெளிப்படுத்தினார்.
வேலூர் மாநகராட்சி கவுன்சிலில், அ.தி.மு.க.வுக்கு 6 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தாலும், சரவணன் 11 வாக்குகள் பெற்றார். அ.தி.மு.க.வின் ஒரே கூட்டணி கட்சியாக உள்ள பா.ஜ.க-வுக்கு ஒரே உறுப்பினர் மட்டுமே உள்ளார்.
வேலூர் மாநகராட்சி கவுன்சிலில், அ.தி.மு.க வேட்பாளருக்கு நான்கு கவுன்சிலர்கள் வாக்களித்தது தெரியவந்ததும் தி.மு.க நிர்வாகிகள், குறிப்பாக வேலூர் எம்.எல்.ஏ.வும், நகரச் செயலாளருமான கார்த்திகேயன் கடும் கோபமடைந்தார்.
வேலூர் தி.மு.க.வில் எதுவுமே சரியில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக கவுன்சிலில் வாக்களிக்கும் நாளில் ஐந்து தி.மு.க கவுன்சிலர்கள் வரவில்லை. அப்படி சரியாக இருந்திருந்தால் அவர்கள், கட்சியின் உத்தரவுக்கு கீழ்படிந்து வாக்குப்பதிவுக்கு வந்திருப்பார்கள் என்று வேலூர் மாவட்ட தி.மு.க-வில் இருக்கும் அதிருப்தியை கூறுகிறார்கள்.
தி.மு.க நிர்வாகிகள் அ.தி.மு.க-வில் இணைவதற்கு எஸ்.ஆர்.கே. அப்பு எந்த தூண்டுதலையும் வழங்கவில்லை என்று கூறுகிறார். “இந்த நடவடிக்கை அவர்கள் இ.பி.எஸ் தலைமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை தெளிவாக வெளிப்படுத்துகிறது. சில தி.மு.க கவுன்சிலர்கள் அ.தி.மு.க கூட்டணிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.” என்று கூறி எஸ்.ஆர்.கே. அப்பு தி.மு.க-வுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.