வேலூர் மக்களவை தொகுதி காட்பாடி, குடியாத்தம் , பேரணசம்பேட்டை, அணைகட்டு, வேலூர், ஆரணி என்ற சட்டம் தொகுதிகள் கொண்டது.
கடந்த 2019ம் தேர்தலில் கதிர் ஆனந்த என்ற வேட்பாளார், திமுக சார்பில் போட்டியிட்டு, 4,85,340 வாக்குகள் எடுத்து வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.சி சண்முகம், 4,77,199 ஓட்டிகளை பெற்று தோல்விடைந்தார்.
2014ம் தேதலில் புதிய நீதிக் கட்சியை சேர்ந்த ஏ.சி. சண்முகம் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டார். இவர் 3,24,326 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். அ.தி.மு.கவை சேர்ந்த பி. செங்குட்டுவன், 3,83,719 பெற்று வெற்றியடைந்தார். 2009ம் தேர்தலில், தி.மு.க சார்பில் போட்டியிட்ட எம்.அப்துல் ரஹ்மான் 3,60,474 என்ற வாக்குகளை பெற்று வெற்றியடைந்தார். அ.தி.மு.க- வைச் சேர்ந்த வாசு 2,53,081 என்ற வாக்குகளை பெற்று தோல்விடைந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“