vellore election campaign : வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், திமுக வேட்பாளரை ஆதரித்து அக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினும் இன்று முதல் பிரச்சாரத்தை தொடங்குகின்றனர்.
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு, ஆகஸ்ட் 5-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில், அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் அந்த கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் உள்ளிட்ட 28 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் வேலூர் தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று முதல் தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார். வாணியம்பாடி தொகுதியில் இருந்து இன்று மாலை பிரச்சாரத்தை தொடங்கும் அவர், ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாக்கு சேகரிக்கிறார். நாளை குடியாத்தம் தொகுதியிலும், ஆகஸ்ட் 2-ம் தேதி மாலை 5 மணிக்கு அணைக்கட்டு மற்றும் வேலூர் சட்டப் பேரவை தொகுதிகளிலும் அவர் பிரச்சாரம் செய்யவுள்ளார்.
இதே போன்று, திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து, அந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று முதல் 3 நாட்கள் பிரச்சாரம் செய்கிறார். இரண்டாம் கட்டமாக, ஆகஸ்ட் 1,2 மற்றும் 3ஆம் தேதிகளிலும் அவர் பிரசாரம் செய்யவுள்ளார்.
பிரச்சாரம் முழு விபரம்:
சனிக்கிழமையன்று வனியாம்பாடி (மாலை 5 மணி) மற்றும் அம்பூர் (மாலை 6 மணி) ஆகிய இடங்களில் முதல்வர் பழனிசாமி உரையாற்றவுள்ளார். அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை கில்வைதினங்குப்பம் (மாலை 5 மணி), குதியாதம் (மாலை 6 மணி); ஆகஸ்ட் 2 ஆம் தேதி அனைகட்டு (மாலை 5 மணி) மற்றும் வேலூர் (மாலை 6 மணி).
ஸ்டாலின் பிரச்சாரம்:
ஸ்டாலின் இன்று காலை வேலூர் உழவர் சந்தையில் இருந்து தனது பிரச்சாரத்தை துவங்கினார். அவருடன் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், பொருளாளர் துரைமுருகன் மற்றும் வேலூர் கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.