/indian-express-tamil/media/media_files/2025/10/06/ibrahim-son-2-2025-10-06-14-53-22.jpg)
வேலுர் இப்ராஹிம் மக்ன் அப்துல் ரகுமான், கார் ஓட்டுநர் ரஷீத் வலது பக்கம் இருப்பவர் வேலூர் இப்ராஹிம்
பா.ஜ.க நிர்வாகி வேலூர் இப்ராஹிம் மகன் அப்துல் ரகுமான் (21) கஞ்சா வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். கஞ்சா பொட்டலங்களுடன் காரில் இருந்தபோது அப்துல் ரகுமான் அவரது கார் ஓட்டுநர் ஆகியோரை திருமங்கலம் ரோந்து போலீசார் கைது செய்தனர்.
சென்னை திருமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாரிக்குப்பம் சாலையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஸ்கார்பியோ கார் ஒன்றை நிறுத்தில் போலீசார் சோதனை செய்தனர். இந்த சோதனையின்போது அதில் இருந்த நபர் ஒருவர் தப்பி ஓடினார். இதனால், அந்த வாகனத்தில் 2 நபர்களைப் பிடித்து போலீசார் விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர்.
அவர்களின் வாகனத்தை சோதனை செய்தபோது, 50 கிராம் கஞ்சா பொட்டலம் மற்றும் கஞ்சா புகைப்பதற்கான காகிதம் மற்றும் பைப்புகள் இருந்தது தெரிய வந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை செய்தபோது, ஒருவர் கல்லூரி மாணவர் அப்துல் ரகுமான் என்றும் இவர் பா.ஜ.க சிறுபான்மை பிரிவு தேசியச் செயலாளர் வேலூர் சையது இப்ராஹிம் மகன் என்பதும் தெரிய வந்தது. கார் ஓட்டுநரான மற்றொருவர் ரஷீத் என்பது தெரியவந்தது.
மேலும், விசாரணையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட சென்றபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காரில் வருவதற்கு ‘லிஃப்ட்’ கேட்டதாகவும் அவரை அழைத்துக்கொண்டு பாரிக்குப்பத்தில் இறக்கிவிடும்போதுதான், போலீசார் சோதனை நடத்தினர். போலீசாரைக் கண்டதும் அந்த நபர் தப்பி ஓடிவிட்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர்.
இருப்பினும், அவர்கள் கஞ்சா புகைத்திருக்கிறார்களா என்று சோதனை செய்வதற்கு போலீசார் அவர்களை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதனை செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
வேலூர் இப்ராஹிமின் மகன் அப்துல் ரகுமான் மற்றும் கார் ஓட்டுநர் ரஷீத் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பியோடிய நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.