ஜல்லிக்கட்டு மூலம் புகழ்பெற்ற வாயுபுத்திரன் என்ற காளை கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் வள்ளிப்பட்டு கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சம்பத் குமார் கடந்த 10 ஆண்டுகளாக காளை ஒன்றை வளர்த்து வந்தார். ஆண்டுதோறும் நடைபெறும் ஜல்லிகட்டு, மஞ்சு விரட்டு உள்ளிட்ட போட்டிகளில் கலந்துக் கொள்ளும் இந்த காளை வில்லனாக வலம் வந்தது.இது களமிறங்கிய மைதானத்தில் பெரும்பாலும் முதல் அல்லது இரண்டாம் பரிசையே தட்டிச்செல்லும்.
இந்நிலையில், எதிர்பாராத விதமாக அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளது. விழுந்த வேகத்தில் அடிப்பட்டு தண்ணீரில் ஒரு மணி நேரம் தத்தளித்துள்ளது. நூற்றுக்கணக்கானவர்கள் முயற்சி செய்தும், வாயுபுத்திரனை காப்பாற்ற முடியவில்லை.
கிணற்றிலேயே வாயு புத்திரன் இறந்த தகவலை கேள்விப்பட்டு அதன் ரசிகர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி கண்ணீர்விட்டு அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
ஜல்லிகட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகளில் மற்ற காளைகளுக்கு கடும் போட்டியாளராக வலம் வந்த காளை இறந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.தகவல் அறிந்த கிராமமக்கள் சுமார் 1000 க்கும் மேற்பட்டோர்
காளை மாட்டிற்கு அஞ்சலி செலுத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த அமைச்சர் நிலோஃபர் கபில், காளைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.