“வேலூரிலும் திமுகவே வெற்றி பெறும்” – கருத்துக் கணிப்புகளை வெளியிட்ட தந்தி டிவி

05/08/2019 அன்று வேலூரில் காலை 7 மணிக்கு துவங்கி மாலை வரை நடைபெற்ற வாக்குப்பதிவில் 72% வாக்குகள் பதிவாகியுள்ளன

Vellore Lok Sabha election Thanthi TV exit poll results
Vellore Lok Sabha election Thanthi TV exit poll results

Vellore Lok Sabha election Thanthi TV exit poll results  : வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் நேற்று (05/08/2019) அன்று நடைபெற்றது. அதிமுக சார்பில் சி.வி.சண்முகம் போட்டியிட்டார். திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அவர்கள் அல்லாமல் 26 வேட்பாளர்கள் அந்த தொகுதியில் போட்டியிட்டனர்.

நேற்று காலை 7 மணிக்கு துவங்கி மாலை வரை நடைபெற்ற வாக்குப்பதிவில் 72% வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேலூர் தொகுதி நீங்கலாக 39 தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 18ம் தேதி நடைபெற்றது. வேலூரில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய முயற்சிகள் நடந்திருப்பதை கண்டறிந்த தேர்தல் ஆணையம், தேர்தலை ரத்து செய்யக் கோரி குடியரசுத் தலைவரிடம் பரிந்துரை செய்தது. இந்தியாவில் உள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று அதன் முடிவுகள் மே மாதம் 23ம் தேதி வெளியானது.

Vellore Lok Sabha election Thanthi TV exit poll results

இந்நிலையில் நேற்று வேலூரில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவினை தந்தி டிவி நேற்று வெளியிட்டது. அதில் திமுக கூட்டணிக்கு – 46% முதல் 52% வாக்குகளை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறியுள்ளது. அதிமுக கூட்டணி – 41% முதல் 47% வரையிலான வாக்குகளை பெற வாய்ப்புகள் உள்ளதாக அறிவித்துள்ளது. நாம் தமிழர் கட்சி 4% முதல் 7% வாக்குகளை பெறும் என்றும் இதர கட்சிகள் 3% முதல் 6% வரை வாக்குகளை பெறும் என்று அந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் என்றால் என்ன?

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vellore lok sabha election thanthi tv exit poll results

Next Story
Today News Updates : ஜம்மு காஷ்மீரை பிரித்து இரு யூனியன் பிரதேசமாக்கும் மசோதா… மக்களவையில் நிறைவேற்றம்news today live updates
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com