தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுபடுத்திய மாவட்டங்களில் ஒன்றாக வேலூர் மாவட்டம் கருதப்படுகிறது. கடந்த 10 நாட்களாக மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள பெருநகரங்களை இரயில் மற்றும் பேருந்து வழித்தடங்கள் மூலமாக நன்றாக இணைக்கப்பட்ட மாவட்டமாக வேலூர் உள்ளது.
எனவே, எல்லையோர பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதில் அம்மாவட்ட நிர்வாகம் முனைப்போடு செயலாற்றி வருகிறது.
இந்நிலையில், ஆந்திரா மாநிலத்தில் இருந்து வரும் தேவையற்ற வாகனங்களை தடுக்கும் நடவடிக்கையாக, குடியாத்தம் சைனகுண்டா மற்றும் கட்டபாடி பொன்னை (மாத்தாண்ட குப்பம்) சோதனை சாவடிகளில் தடுப்பு சுவர்களை அம்மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளது .
3 அடி உயரத்திலும், 4 அடி அகலத்திலும், 30 அடி நீளத்திலும் தடுப்பு சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளது.வேகமாக வந்து தடுப்புச்சுவர் மீது மோதாமல் இருக்க தடுப்பு சுவருக்கு சற்று தூரத்தில் சாலையின் இரு புறமும் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது
வேலூர் மாவட்டத்தில் ஆந்திர எல்லையையொட்டி காட்பாடி, கிறிஸ்டியான் பேட்டை, பரதராமி, பத்தலபள்ளி, சைனகுண்டா, சேர்க்காடு, பொன்னை (மாத்தாண்ட குப்பம்) ஆகிய 6 சாலை உள்ளன. அண்டை மாநிலங்களில் இருந்து காய்கறிகள், சிமென்ட், கிரானைட் கற்கள் போன்றவற்றை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் மேற்கூறிய சாலைகள் வழியாக வேலூர் மாவட்டத்தை அடைகின்றது. சைனகுண்டா சோதனைச் சாவடியை நோக்கிச் செல்லும் வாகனங்கள் இனி பரதராமி சோதனைச் சாவடி வழியாகவும், பொன்னை (மாத்தாண்ட குப்பம்) சோதனைச் சாவடிக்குள் நுழையும் ஒத்த வாகனங்கள் இனி கிறிஸ்டியன் பேட் அல்லது செர்காடு வழியாகவும் மாற்றப்படுகின்றன என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மாநிலங்களுக்கு இடையிலான அத்தியாவசிய போக்குவரத்த்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், வாகனங்களை குறிப்பாக இரண்டு சக்கர வாகனங்களை கண்காணிப்பது மாவாட்ட நிர்வாகத்திற்கு பெரும் சவாலான ஒன்றாக அமைந்தது. அதன் பொருட்டு, இந்த தடுப்பு சுவர் நடவடிக்கை முடிக்கி விடப்பட்டதாவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
பரதராமி, பத்தலபள்ளி, சைனகுண்டா, சேர்க்காடு சாலைகள் வழக்கம் போல் செயல்படும். அத்தியாவசிய பொருட்களை ஏந்தி செல்லும் வாகனங்களின் ஓட்டுனர் மற்றும் உதவியாளர் முறையான தெர்மல் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.