Advertisment

வேலூர் அருகே மாணவர்களிடம் கிறிஸ்வ மதத்தை பரப்பும் தொடக்கப் பள்ளி- விசாரிக்க என்.சி.பி.சி.ஆர். உத்தரவு

இதுபோன்ற மதச் செயல்களால் மனோ-சமூக நடத்தை மற்றும் உணர்ச்சிகள் பாதிக்கப்படலாம் என்பதால் பள்ளியில் இதுபோன்ற செயலை ஆணையம் கண்டிக்கிறது.

author-image
WebDesk
New Update
Bible

Vellore school spreading Christian religion among students

வேலூர் மாவட்டம், கேவி குப்பம் தொகுதியில், கிறிஸ்தவ மத நம்பிக்கையை பரப்பும் தொடக்கப் பள்ளி மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரித்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனாவுக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) உத்தரவிட்டுள்ளது.

Advertisment

இதுதொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங்க் கனூங்கோ அனுப்பிய கடிதத்தில், தொகுதிக் கல்வி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர், மற்றும் இதர அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் முன்னிலையில் தொடக்கப் பள்ளிக்குச் சென்ற ஆணையத்தின் குழு, பள்ளி வளாகத்தில் புதிய மற்றும் மறுவழிப்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கான'வளரும் நம்பிக்கை' என்ற புத்தகத்தை கண்டறிந்தது.

க்ரோயிங் ஃபெயித்’ போன்ற ஒரு குறிப்பிட்ட மத புத்தகத்தை வைத்திருப்பது பள்ளி மாணவர்களிடையே கிறிஸ்தவத்தின் மீதான நம்பிக்கை வளர்ப்பதை குறிக்கிறது, மேலும் ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீது நம்பிக்கையை பரப்பும்/ஊக்குவிப்பதற்கான செயலாகத் தோன்றுகிறது, என்பதை ஆணையம் உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறது.

தவிர, இதுபோன்ற மதச் செயல்களால் மனோ-சமூக நடத்தை மற்றும் உணர்ச்சிகள் பாதிக்கப்படலாம் என்பதால் பள்ளியில் இதுபோன்ற செயலை ஆணையம் கண்டிக்கிறது.

இந்த சம்பவம் இந்திய அரசியலமைப்பின் 28வது பிரிவு மற்றும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான உரிமைச் சட்டம் (RTE) சட்டம், 2009 இன் பிரிவு 29 மற்றும் பிற சட்ட விதிகளை மீறுவதாகத் தெரிகிறது.

எனவே இந்த விவகாரத்தில் தலையிட்டு பள்ளி மீது தேவையான நடவடிக்கை எடுக்குமாறு தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனாவுக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் பிரியங்க் கனூங்கோ உத்தரவிட்டார்.

இந்தக் கடிதம் கிடைத்த ஏழு நாட்களுக்குள் (அக்டோபர் 13) எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கனூங்கோ கடிதத்தில் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment