தேச துரோக வழக்கில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டார்.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த மக்களை பார்த்து ஆறுதல் சொல்ல, தூத்துக்குடிக்கு சென்றார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவரை போலீசார் கைது செய்தனர்.
காவிரி பிரச்னை தொடர்பாக, உள்ளுந்தூர்பேட்டை டோல்கேட்டை அடித்து உடைத்த வழக்கில் அவரை கைது செய்வதாக போலீசார் அறிவித்தனர். இதையடுத்து அவரை மறு நாள் சென்னை கொண்டு வந்தனர். சென்னை வரும் வழியில், போரூர் சுங்க சாவடி அடித்து நொறுக்கினார்கள், தமிழக வாழ்வுரிமை கட்சியினர்.
கைது சம்பவத்தை கண்டித்து, சிறையில் வேல்முருகன் உண்ணாவிரதம் இருந்தார். இதையடுத்து அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பெற்று வரும் அவரை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்நிலையில், நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பேசியதாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் அவரை போலீசார் தேச துரோக வழக்கில் கைது செய்வதாக அறிவித்தார்.
விரைவில் அவர் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயவும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது,