காவிரி மேலாண்மை வாரியம் விவகாரம்: சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கி போராட்டம்!

உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சூறையாடினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து, விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சூறையாடினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தலைமையில், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்குறிச்சி சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு வரி செலுத்த முடியாது என்றும், சுங்கக்கட்டணம் என்ற பெயரில் கொள்ளை நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டி அவர்கள் முழக்கமிட்டனர்.

முதலில் சாலையோரம் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், திடீரென சுங்கச்சாவடி வசூல் மையங்களை கையில் வைத்திருந்த கொடிக் கம்புகளால் தாக்கினர். இந்த, திடீர் தாக்குதலால் பதறிப் போன வசூல் மைய ஊழியர்கள் அங்கிருந்து அலறியடித்து ஓடினர். போலீசார் பாதுகாப்பு இருந்தபோதே வசூல் மையங்கள் நொறுக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது. இதைத் தொடர்ந்து, வேல்முருகன் உள்பட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

×Close
×Close