விருத்தாசலம் சிறையில் கைதி மரணம்: ஆதாரம் வெளியிட்ட வேல்முருகன்

செல்வமுருகன் மரணம் குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், நகைக்கடை ஒன்றில் முருகனை போலீசார் மிரட்டும் சிசிடிவி காட்சி உள்ளிட்ட சில ஆதாரங்களை வெளியிட்டார்.

By: November 18, 2020, 12:13:46 AM

கடலூர் மாவட்டம், நெய்வேலி நகர காவல் நிலைய போலீசார் திருட்டு வழக்கு சம்பந்தமாக காடாம்புலியூரைச் சேர்ந்த செல்வமுருகன் என்பவரை அக்டோபர் 30ம் தேதி கைது செய்து விருத்தாச்சலம் கிளை சிறையில் வைத்தனர். இதையடுத்து, அவர் நவம்பர் 4ம் தேதி இரவு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

செல்வமுருகன் போலிசாரால் சித்திரவதை செய்யப்பட்டதால் உயிரிழந்தார் என்று புகார் எழுந்தது. அறிவியல் இந்திரா நகர் பகுதியில் சட்டவிரோதமாக செப்டம்பர் 28, 29 ஆகிய 2 நாட்கள் தனியார் விடுதியில் காவல்துறையினர் செல்வமுருகனை ஒரு அறையில் வைத்து சித்திரவதை செய்ததால் இறந்து விட்டதாகவும் அவர் இறப்புக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என செல்வமுருகனின் மனைவி நவம்பர் 5ம் தேதி புகார் அளித்தார்.

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் செல்வமுருகன் மரணத்தில் மர்மம் உள்ளது என்றும் அதனை போலீசார் விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதையடுத்து, தமிழக அரசு செல்வமுருகன் மரணம் வழக்கு விசாரணையை நவம்பர் 6ம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றியது. நவம்பர் 7ம் தேதி கடலூர் மாவட்ட சிபிசிஐடி ஆய்வாளர் விசாரணையைத் தொடங்கினார். ஆனால், குற்றம் சாட்டப்பட்ட ஒரு ஆய்வாளரை மற்றொரு ஆய்வாளர் விசாரணை நடத்தினால் உண்மை முழுமையாக வெளிக்கொண்டு வர முடியாது. அதனால், ஆய்வாளருக்கு மேல் உள்ள அதிகாரிகள் தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

மேலும், நியாயமான முறையில் விசாரணை நடத்த வேண்டும் குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செல்வமுருகனின் உறவினர்கள் பொதுமக்கள் செல்வமுருகன் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், செல்வமுருகனின் உடல் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

போராட்டம் காரணமாக, செல்வமுருகன் மரணம் தொடர்பான விசாரணையை சிபிசிஐடி ஆய்வாளர் அளவில் இருந்து சிபிசிஐடி டிஎஸ்பி அளவிலான விசாரணைக்கு மாற்றப்பட்டது.

செல்வமுருகன் மரணம் தொடர்பாக சிறப்பு விசாரணை அதிகாரியாக சென்னை சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்மன் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, செல்வமுருகன் மனைவி உறவினர்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், செல்வமுருகன் மரணம் குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், நகைக்கடை ஒன்றில் முருகனை போலீசார் மிரட்டும் சிசிடிவி காட்சி உள்ளிட்ட சில ஆதாரங்களை வெளியிட்டார். மேலும், அவர் செல்வமுருகன் மீது போலீசார் திட்டமிட்டே திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

 

தொடர்ந்து பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், விருத்தாச்சலம் சிறையில் அடைக்கப்பட்ட செல்வமுருகன் போலீசாரால் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. உயிரிழந்த செல்வமுருகன் ஒன்றும் வழிப்பறி திருடன் அல்ல. அவர் ஒரு வளர்ந்து வரும் இளம் தொழிலதிபர். போலீசார் அரியலூரைச் சேர்ந்த மற்றொரு செல்வமுருகன் என்ற பெயரில் உள்ள முதல் தகவல் அறிக்கையை காட்டினார்கள். இருவருடைய தந்தை பெயர்களும் வேறு. அக்டோபர் 29ம் தேதி காவலர்களுடன் இருக்கும் செல்வமுருகன் எப்படி நகையை வழிப்பறி செய்திருக்க முடியும்.

செல்வமுருகன் கொரோனா காலத்திலும் அதற்கு முன்ன பணமதிப்பிழப்பு காலத்திலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். அதனால், மன உளைச்சலுக்கு ஆளான செல்வமுருகன் மது பழக்கத்திற்கு ஆளாகியுள்ளார். அவரது இந்த நிலையை போலீசார் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்” என்று கூறினார். மேலும்ம், வேல் முருகன் தன்னிடம் உள்ள ஆதாரங்களை மாஜிஸ்ட்ரேட்டிடம் அளிக்க உள்ளதாகக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, வேல்முருகன் வெளியிட்ட வீடியோ ஆதாரங்களை கைப்பற்றி விசாரணை நடத்தப்படும் என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Velmurugan press meet about virudhachalam custody death case

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X