Advertisment

'சேது சமுத்திர திட்டம்; மீனவ மக்களின் குரலையும் கேட்க வேண்டும்' - வேல்முருகன்

சேது சமுத்திரம் திட்டம் அமைப்பது குறித்து மீனவ மக்கள் கருத்தையும் கேட்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கூறினார்.

author-image
WebDesk
New Update
Velmurugan said that fishermen should be consulted regarding the Setu Samudra project

அய்யா வழி ஆன்மிக குரு பால பிரஜாபதி அடிகளார் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவரும் எம்.எல்.ஏமான வேல்முருகன்.

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் தோள்சீலை போராட்டத்தின் 200ஆவது ஆண்டை நினைவு கூறும் வகையிலும், அய்யாவழி ஆன்மிக குரு பால பிரஜாபதி அடிகளாரின் 75ஆவது பிறந்தநாள் விழாவிலும் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கலந்துகொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அஸ்ஸாம், ஓரிசா, பீகார் பவன் என ஆரம்பித்து தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு வேலை வாய்ப்புகளை வடமாநிலத்தவர்கள் பறிக்கிறார்கள்.
ஆகவே இதுபோன்ற பயிற்சி மையங்களை தமிழக அரசும் தொடங்க வேண்டும்.

Advertisment

தற்போது நடைபெற்ற வங்கித் தேர்வில் 8 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் ஒருவர் கூட தென்மாநிலத்தை சேர்ந்தவர்கள் கிடையாது.
அதேபோல் 1200 வருவாய் அலுவலர்கள் பணியிலும் ஒருவர் கூட தென்மாநிலத்தை சேர்ந்தவர் கிடையாது. மேலும் தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு படித்தவர்கள் நிறைய பேர் இருக்கும்போது அவர்களின் பணியை வடமாநில இளைஞர்கள் எடுத்துக்கொள்கின்றனர்.

மேலும், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் அண்மையில் 299 பேர் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள் அந்த 299 பேரில் ஒருவர் கூட தமிழர் கிடையாது.
ஆனால் அந்த நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனுக்கு இடம் கொடுத்தவர்கள் இங்குள்ள மக்கள். அவருடைய இடங்களையெல்லாம் ஆக்கிரமித்து தொழிற்சாலை அமைத்து அதில் வேலை வாய்ப்பை மட்டும் தமிழர்களுக்கு மறுப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.

ஆகவே இந்த நிலையை போக்குவதற்கு தமிழக அரசு மட்டுமல்ல பொதுமக்களும் களத்தில் இறங்க வேண்டும். அண்மையில் இதற்கு எதிராக என்னுடைய தலைமையில் 50000 மக்களை திரட்டி நான் ஒரு போராட்டம் நடத்தினேன்.
நாங்கள் என்எல்சி பொதுத்துறை நிறுவனத்தை எதிர்க்கவில்லை. என் மண்ணின் மக்களை வாழ வை என்று தான் கேட்கிறோம். இதன்மூலம் எதிர்காலத்தில் தமிழ்நாட்டு வேலையை தமிழர்களுக்கு கொடு என்கிறோம்.

தமிழ்நாட்டு வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கு முதலிடம் என்ற நிலையை உருவாக்க வேண்டும். நான் சட்டமன்றத்தில் பள்ளிக் கல்வியில் தமிழை கட்டாயமாக்க வேண்டும் என்று வைத்த கோரிக்கையை முதல்வர் ஏற்று தமிழை கட்டாயம் ஆக்கி இருக்கிறார்.

தமிழ் தெரிந்தவர்களுக்கு தான் தமிழ்நாட்டில் வேலை என்கின்ற சட்டத்தை ஏற்றிருக்கிறார். ஆகவே எதிர்காலத்தில் நம்முடைய இளைஞர்கள் இளம்பெண்களுக்கு தமிழகத்தில் அரசு பணிகளில் வாய்ப்பு கிடைப்பதற்கு இந்த சட்டம் உதவி செய்வதோடு வெளி மாநிலத்தவர்கள் இங்கு வருவதை தடுக்கவும் வழி வகுக்கும் என நம்புகிறேன்.

ஆளுநர் ஆர் என் ரவி அண்மையில் அவரது ஒரு சறுக்கலை வெளிப்படுத்தி இருக்கிறார். அதாவது தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது என்று நான் சொல்லவில்லை தமிழகம் என்று சொல்வது எளிமையாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான் சொன்னேன்.
அது தமிழ் மக்களுக்கு தவறாக புரிய வைக்கப்பட்டுவிட்டது. நான் தமிழ்நாடு என்ற சொல்லுக்கு எதிரானவன் அல்ல என்று சொல்லியிருப்பது அவருக்க ஏற்பட்டிருக்கின்ற மிகப்பெரிய தோல்வியை குறிக்கிறது.

அண்மையில் ஆளுநர் வெளியிட்ட வாழ்த்தில் பயன் படுத்தப்பட்ட கடிதத்தில் தமிழக அரசின் லட்சினையான திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோவில் கோபுரம் அடையாளத்தை பயன் படுத்தாமல் டெல்லி மூன்று தலை சின்னம் லட்சனையை பயன்படுத்தி இருந்தார்.

மேலும், சேது சமுத்திரம் திட்டம் அமைப்பது குறித்து மீனவ மக்கள் கருத்தையும் கேட்க வேண்டும்” என்றார்.

செய்தியாளர் த.இ. தாகூர்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment