புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் தேசிய பட்டியலின ஆணையம் விசாரணை நடத்தி உள்ளது.
குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் தேசிய பட்டியலின ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. டெல்லியில் இருந்து வந்த தேசிய பட்டிலின ஆணைய இயக்குநர் ரவிவர்மன், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து விவரங்களை கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து பேசிய ரவிவர்மன், ” இந்த சம்பவம் நடந்து 408 நாட்கள் கடந்தும் குற்றவாளிகளை கண்டறிய முடியவில்லை. விசாரணை முறையாக நடைபெறவில்லை என்று மக்கள் கூறுகின்றனர். வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர்.
மனிதக் கழிவுகள் கலந்த நீரை சி.பி.சி.ஐ.டி சாம்பிள் எடுத்த விதம் தவறு. இதேபோல் டி.என்.ஏ ரத்த மாதிரி பரிசோதனையும் தவறு. உண்மையை கண்டறியும் சோதனை மட்டுமே இதற்கு தீர்வாகும். அதிக அளவு நீரில் மலம் கலக்கப்பட்டதால் சோதனை முடிவுகள் சரியாக இருக்காது. விசாரணை குறித்து அறிக்கை 3 நாட்களில் ஆணையத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்படும்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“