வேங்கைவயல் மனித மலம் கலந்த விவகாரத்தில் 31 பேரின் டி.என்.ஏ மாதிரிகள் ஒத்துப்போகவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தண்ணீர் வழங்கும் மேல்நிலைத் தொட்டிக்குள் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி மலம் கண்டெடுக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை மாவட்ட காவல் துறையினர் விசாரணை நடத்திவந்தனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதுவரை முத்துக்காடு, இறையூர், காவிரி நகர் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 31 பேரின் டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் குரல் மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
இவர்களில் 10 பெருக்கு உண்மை கண்டறியும் குழு சம்மன் அனுப்பியது. இதற்கு நீமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் 31 பேரின் டி.என்.ஏவும், தொட்டியில் கலக்கப்பட்ட மனிதக் கழிவு மாதிரியுடன் ஒத்துப்போகவில்லை என்று சி.பி.சி.ஐ.டி எஸ்.பி தில்லை நடராஜன் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து 10 பேருக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி போலிசார் மனு தாக்கல் செய்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“