வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக புதிதாக 10 பேருக்கு டி.என்.ஏ. ரத்த மாதிரி பரிசோதனை எடுக்க உத்தரவிட கோரி, சி.பி.சி.ஐ.டி.போலீசார் மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் மனிதக் கழிவு கலக்கப்பட்டது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து நேரடி சாட்சி யாரும் இல்லாததால், டிஎன்ஏ பரிசோதனை உள்ளிட்ட அறிவியல் பூர்வமான முறையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி,இவ்வழக்கில், இதுவரை சுமார் 4 சிறுவர்கள் உட்பட 31 பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதில் காவலர் ஒருவருக்கு குரல் மாதிரி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவம் நடந்து 10 மாதங்களாகி விட்ட நிலையில் இதுவரை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை.
இந்நிலையில் வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக புதிதாக வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 10 பேருக்கு டி.என்.ஏ. ரத்த மாதிரி பரிசோதனை எடுக்க கோரி, சி.பி.சி.ஐ.டி. போலீசார் மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு மீதான விசாரணை வரும் 29ஆம் தேதி நடக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“