மருத்துவமனையில் கருணாநிதியை சந்தித்த வெங்கைய்யா நாயுடு மற்றும் ஆளுநர் புரோகித்
Kalaignar Karunanidhi, M Karunanidhi LIVE: கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த புகைப்படத்தை வெளியிட்டது தொண்டர்களை ஆறுதல் படுத்தியது.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி, நேற்று முன்தினம் நள்ளிரவு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று அறிக்கை வெளியிட்டது. பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கருணாநிதியின் உடல்நலம் குறித்து நேரில் வருகை தந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தார். அங்கு, ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களிடம் கருணாநிதிக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
Visited Kaveri Hospital and met former Chief Minister Thiru Kalaignar Karunanidhi. Met his family members and doctors and enquired about his health. Doctors said he is stable. Wish him a speedy recovery. @kalaignar89pic.twitter.com/Q7ay71txzT
— VicePresidentOfIndia (@VPSecretariat) July 29, 2018
இதைத் தொடர்ந்து, கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் அறைக்குச் சென்று அவரை நேரடியாக வெங்கையா நாயுடு மற்றும் ஆளுநர் பன்வாரிலால் பார்த்தனர். இதுவரை மற்ற அரசியல் கட்சித்தலைவர்கள் கருணாநிதியை நேரடியாக பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழ்நிலையில், சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கருணாநிதியின் சிகிச்சை குறித்து விசாரிக்க அவரை நேரில் சந்தித்த புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இதன்மூலம், தேவையில்லாத வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.