scorecardresearch

கருணாநிதி சிகிச்சை புகைப்படம்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

DMK Chief Karunanidhi Health Today: கருணாநிதியின் புகைப்படத்தை வெளியிட்டதை அப்பல்லோ நிகழ்வுடன் ஒப்புமைப்படுத்தி பார்க்கிறார்கள்.

M Karunanidhi Health Updates: venkaiah naidu and banwarilal purohit
மருத்துவமனையில் கருணாநிதியை சந்தித்த வெங்கைய்யா நாயுடு மற்றும் ஆளுநர் புரோகித்

Kalaignar Karunanidhi, M Karunanidhi LIVE: கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த புகைப்படத்தை வெளியிட்டது தொண்டர்களை ஆறுதல் படுத்தியது.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி, நேற்று முன்தினம் நள்ளிரவு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று அறிக்கை வெளியிட்டது. பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கருணாநிதியின் உடல்நலம் குறித்து நேரில் வருகை தந்து விசாரித்து வருகின்றனர்.

Karunanidhi Health News Today, DMK Chief M Karunanidhi Health, கருணாநிதி உடல்நிலை LIVE UPDATES

இந்நிலையில், இன்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தார். அங்கு, ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களிடம் கருணாநிதிக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து, கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் அறைக்குச் சென்று அவரை நேரடியாக வெங்கையா நாயுடு மற்றும் ஆளுநர் பன்வாரிலால் பார்த்தனர். இதுவரை மற்ற அரசியல் கட்சித்தலைவர்கள் கருணாநிதியை நேரடியாக பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழ்நிலையில், சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கருணாநிதியின் சிகிச்சை குறித்து விசாரிக்க அவரை நேரில் சந்தித்த புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இதன்மூலம், தேவையில்லாத வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Venkaiah nayudu met karunanidhi photo released