தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி அர்ஜூன் கோபால் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை தொடர்ந்து பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் பட்டாசு தொழிலாளர்களின் குடும்ப நலன் கருதி பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசு சார்பில் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல் பட்டாசு வெடிப்பதற்கான கால அவகாசத்தை நீடிக்க கோரியும் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் கடந்த 15ம் தேதி நீதிபதிகள் போண்ணா, சுந்தரேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது பட்டாசுகளில் 22 முதல் 30 விழுக்காடு வரை பேரியம் என்ற நச்சுப் பொருட்கள் பயன்படுத்துவதால் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு பட்டாசு ஆலைகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன் பசுமைப் பட்டாசுகள் தயாரிக்கபடுவதாகவும் வாதிடப்பட்டது.
பட்டாசு தொடர்பான அனைத்து மனுக்களையும் ஒன்றிணைத்துள்ள உச்சநீதிமன்றம், விசாரணையை முடித்து தேதி குறிப்பிடமால் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் இன்றும் பிறப்பித்த உத்தரவில், சுற்றுச்சூழலை பாதிக்காத பட்டாசுகளை வெடிக்கலாம். தீபாவளி அன்று நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மாற்றம் இல்லை. ஏற்கனவே காலை 6 முதல் 7 மணி வரையும் மாலை 7 முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம். டெல்லியில் பட்டாசுக்கான தடை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“