Advertisment

சென்னையில் எந்த மூலையில் இருந்தாலும்... கிளாம்பாக்கம் கலைஞர் பஸ் நிலையம் வர ஈஸி ரூட் இது!

சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்தில் புதியதாக திறக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை எளிதாக வந்தடைய எந்தெந்த வழித் தடங்களைப் பயன்படுத்தலாம் என்பது குறித்து சி.எம்.டி.ஏ தெரிவித்துள்ளது. 

author-image
WebDesk
New Update
kalaignar bus terminus

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்தில் புதியதாக திறக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை எளிதாக வந்தடைய எந்தெந்த வழித் தடங்களைப் பயன்படுத்தலாம் என்பது குறித்து சி.எம்.டி.ஏ தெரிவித்துள்ளது. 

Advertisment

சென்னையில் இருக்கும் மக்கள் தீபாவளி, பொங்கல் பண்டிகையைக் கொண்டாட, தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் ஒவ்வொரு ஆண்டும் கோயம்பேடு பேருந்து நிலையம் மூச்சுத் திணறி நிற்கும். இதற்காக, தென் மாவட்டங்களுக்கு செல்ல வசதியாக கிளாம்பாக்கத்தில் 400 கோடி ரூபாயில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. 

கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் டிசம்பர் 30-ம் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் டிசம்பர் 31-ம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. அதிகாலை 4 மணிக்கெல்லாம் தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயங்கத் தொடங்கியது. புதிய பேருண்து முனையத்தில் இருந்து மக்கள் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர். 

இந்நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திற்கு எப்படி செல்வது என்பது குறித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வெளியிட்டுள்ளது. 

நீங்கள் சென்னையில் எந்த மூலையில் இருந்தாலும் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் வருவதற்கு ஈஸி ரூட்டைத் தெரிந்துகொள்ளுங்கள். 

அடையாறில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அடைவது எப்படி?

1.அடையாறு முதல் கிண்டி ரயில் நிலையம் வரை மாநகர பேருந்தில் வரலாம். கிண்டி டூ தாம்பரம் வரை மின்சார ரயிலில் வந்து , தாம்பரம் டூ கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மாநகர பேருந்தில் வரலாம். 

2.அடையாறு டூ கிண்டி ரயில் நிலையத்திற்கு மாநகர பேருந்தில் வர வேண்டும். கிண்டி டூ வண்டலூர் அல்லது ஊரபாக்கம் வரை மின்சார ரயிலில் வரலாம். நடந்தோ அல்லது ஷேர் ஆட்டோவிலோ கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வரலாம் 



கோயம்பேடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வருவதற்கான ஈஸி ரூட் இதோ.

1.கோயம்பேடு டூ கிளாம்பாக்கத்திற்கு நேரடியாக பேருந்தில் வரலாம். (அல்லது)

கோயம்பேட்டிலிருந்து விமான நிலையம் வரை மெட்ரோவில் வந்துவிட்டு திரிசூலத்திலிருந்து தாம்பரத்திற்கு மின்சார ரயிலில் வர வேண்டும். தாம்பரத்திலிருந்து மாநகர பேருந்தில் கிளாம்பாக்கம் வரலாம். (அல்லது)

2.கோயம்பேட்டிலிருந்து விமான நிலையம் வரை மெட்ரோவில் வந்துவிட வேண்டும். பின்னர், திரிசூலத்திலிருந்து வண்டலூர் அல்லது ஊரப்பாக்கத்திற்கு மின்சார ரயிலில் வந்து நடந்தோ அல்லது ஷோ ஆட்டோவில் கிளாம்பாக்கம் வரலாம்.

வேளச்சேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்ல ஈஸி ரூட் இதோ.

1.வேளச்சேரியிலிருந்து கிண்டி ரயில் நிலையத்திற்கு மாநகர பேருந்து மாநகர பேருந்தில் இருந்து வந்தடைய வேண்டும். பிறகு கிண்டியிலிருந்து தாம்பரத்திற்கு மின்சார ரயிலில் வந்து அங்கிருந்து கிளாம்பாக்கத்திற்கு மாநகர பேருந்தில் வர வேண்டும். (அல்லது) 

2.வேளச்சேரியிலிருந்து கிழக்கு தாம்பரம் வரை மாநகர பேருந்தில் அங்கிருந்து கிளாம்பாக்கத்திற்கு எம்டிசி பேருந்துகளில் வர வேண்டும். (அல்லது)

3.வேளச்சேரியிலிருந்து கிழக்கு தாம்பரம் வரை மாநகர பேருந்தில் வந்து அங்கிருந்து வண்டலூர் அல்லது ஊரப்பாக்கத்திற்கு மின்சார ரயிலில் வந்து அங்கிருந்து நடந்தோ அல்லது ஷேர் ஆட்டோவிலோ கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அடையலாம். (அல்லது)

சோழிங்கநல்லூர் பகுதியில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்ல ஈஸி ரூட்:

1. சோழிங்கநல்லூரிலிருந்து தாம்பரம் கிழக்கு (பெரும்பாக்கம் வழியாக) மாநகர பேருந்தில் வர வேண்டும். அங்கிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மாநகர பேருந்தில் செல்ல வேண்டும். (அல்லது) 

2.சோளிங்கநல்லூர் முதல் தாம்பரம் கிழக்கு வரை பெரும்பாக்கம் வழியாக செல்லும் மாநகர பேருந்தில் செல்ல வேண்டும். தாம்பரத்திலிருந்து வண்டலூர் அல்லது ஊரப்பாக்கத்திற்கு மின்சார ரயிலில் செல்ல வேண்டும். அங்கிருந்து கிளாம்பாக்கத்திற்கு நடந்தோ அல்லது ஷேர் ஆட்டோவிலோ செல்ல வேண்டும். 

கேளம்பாக்கம் பகுதியில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்ல எளிதான வழித்தடம் இதோ:

1.கேளம்பாக்கத்திலிருந்து நேரடியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்லலாம். 

கேளம்பாக்கத்திலிருந்து வண்டலூர் ரயில் நிலையம் வரை மாநகர பேருந்திலும் அங்கிருந்து நடந்தோ அல்லது ஷேர் ஆட்டோவிலோ கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திற்கு செல்லலாம். 

பூந்தமல்லி பகுதியில் இருந்து கிளாம்பாக்கம் நிலையம் செல்ல ஈஸி ரூட்:

1. பூந்தமல்லி டூ தாம்பரத்திற்கு குன்றத்தூர் வழியாக செல்லும் பேருந்தில் ஏற வேண்டும். அங்கிருந்து கிளாம்பாக்கத்திற்கு மாநகர பேருந்து இருக்கிறது. 

2.பூந்தமல்லியில் இருந்து குரோம்பேட்டைக்கு கத்திபாரா வழியாக செல்லும் பேருந்தில் வந்து அங்கிருந்து வண்டலூர் அல்லது ஊரப்பாக்கத்திற்கு மின்சார ரயிலில் சென்று அங்கிருந்து கிளாம்பாக்கத்திற்கு நடந்தோ அல்லது ஷேர் ஆட்டோவில் செல்லலாம். 

போரூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் செல்ல எலிதான வழித்தடம்:

1.போரூரில் இருந்து தாம்பரம் வரை மாநகர பேருந்தில் செல்லலாம். அங்கிருந்து மாநகர பேருந்தில் கிளாம்பாக்கம் செல்லாம்.

2.போரூரிலிருந்து கிண்டி ரயில் நிலையம் வரை மாநகர பேருந்தில் செல்லலாம். அங்கிருந்து வண்டலூர் அல்லது ஊரப்பாக்கம் வரை மின்சார ரயிலில் செல்லலாம். அங்கிருந்து ஷேர் ஆட்டோவிலோ அல்லது நடந்தோ கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அடையலாம். 

குன்றத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதியிலிருந்து கிளாம்பாக்கத்திற்கு செல்வதற்கான ஈஸி ரூட் இதோ

1.கோயம்பேட்டிலிருந்து தாம்பரம் வரை பேருந்தில் வர வேண்டும். பின்னர் அங்கிருந்து கிளாம்பாக்கத்திற்கும் மாநகர பேருந்துகள் உள்ளன. (அல்லது)

2.குன்றத்தூரிலிருந்து குரோம்பேட்டைக்கு பேருந்தில் வந்து அங்கிருந்து வண்டலூர் அல்லது ஊரப்பாக்கத்திற்கு மின்சார ரயிலில் வந்து அங்கிருந்து கிளாம்பாக்கத்திற்கு நடந்தோ அல்லது ஷேர் ஆட்டோவிலோ செல்ல வேண்டும். 

பிராட்வேயில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்ல ஈஸி ரூட்:

1.பிராட்வேயிலிருந்து கிளாம்பாக்கத்திற்கு நேரடியாக பேருந்து இருக்கிறது. 

2.உயர் நீதிமன்றத்திலிருந்து விமான நிலையம் வரை மெட்ரோவில் வந்துவிட்டு அங்கிருந்து வண்டலூர் அல்லது ஊரப்பாக்கம் பேருந்தில் ஏறி நடந்தோ அல்லது ஷேர் ஆட்டோவிலோ கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வரலாம். 

மீஞ்சூர் மற்றும் எண்ணூர் பகுதியில் இருந்து கிளாம்பாக்கம் வர எளிதான வழி:

1.மீஞ்சூர், எண்ணூரிலிருந்து கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திற்கு வந்து அங்கிருந்து கிளாம்பாக்கம் பேருந்தில் பயணிக்கலாம். 

2.மீஞ்சூர் அல்லது எண்ணூரிலிருந்து பீச் ஸ்டேஷனுக்கு பேருந்தில் வந்து அங்கிருந்து வண்டலூர் அல்லது ஊரப்பாக்கத்திற்கு ரயில் நிலையத்தில் வரலாம். அங்கிருந்து நடந்தோ அல்லது ஷேர் ஆட்டோவிலோ கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அடையலாம்.

மாதவரம், செங்குன்றம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியினர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்ல ஈஸி ரூட்!

1.மாதவரத்திலிருந்து கோயம்பேடு பஸ் நிலையம் வந்து அங்கிருந்து கிளாம்பாக்கத்திற்கு அரசு பேருந்தில் வரலாம். 

2.செங்குன்றத்திலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரலாம். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kilambakkam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment