விழுப்புரம் மாவட்டத்தில் கால்நடைத் துறை எந்த பணியும் செய்வதில்லை. பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்பதை கண்டித்து இன்று நேமூர் சாலையில் கால்நடை விவசாயிகள் சாலை மறியல் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கால்நடைத் துறை எந்த பணியும் செய்வதில்லை என்றும் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை கண்டித்தும் இன்று (ஜூலை 1) நேமூர் சாலையில் கால்நடை விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்ட கால்நடைத்துறை கால்நடைகளுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படுவது இல்லை. இதுகுறித்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இன்று வரை எடுக்கவில்லை என்று கூறி நேமூர் கிராம் மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத் தலைவர் களிவரதன் தலைமையில் காலை 11.30 மணி அளவில் மாடு வளர்ப்போர் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் குறித்து விவசாயிகள் கூறுகையில், நேமூர் கிராமத்தில் குமார் என்பவரது பசு மாடு நோய் வாய்ப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவரிடம் கூறி அவர் எவ்வித சிகிச்சையும் அளிக்காததால் மாவட்ட உதவி இயக்குனரிடம் புகார் கூறினோம். அவரும் ஒரு வார காலமாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மாடு உயிரிழக்கும் நிலையில் உள்ளது.
எனவே, இது மற்றவர்களுக்கு ஏற்படாமல் இருக்க விக்கிரவாண்டி தாலுக்கா நேமூர் கிராமத்தில் இன்று சாலை மறியல் போராட்டல் ஈடுபட்டுள்ளோம் என்றனர். போராட்டத்தில் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையினர் வந்து தீர்வு செய்வதாக கூறினர். அதன் பின்பு சாலை கைவிடப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“