Vice President Venkaiah Naidu Book Launch Listening Learning Leading : துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்களின் பணி குறித்த ஆவணப் புத்தகம் ஒன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று வெளியிடப்படுகிறது. இந்த ஆவணப் புத்தகத்தின் வெளியீட்டு விழாவினை நடத்துவதற்காக சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. சென்னையில் இருக்கும் கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை சரியாக 10:30 மணி அளவில் இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
The Honorable Vice President at an exhibition showcasing the major events in his life right from his childhood, including the glimpses of his 2 years in office as the #VicePresidentofIndia. #2YearsinOffice #Listening #Learning #Leading pic.twitter.com/R0kPY9QIyu
— VicePresidentOfIndia (@VPSecretariat) August 11, 2019
இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக நேற்று இரவே சென்னை வந்தடைந்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. அவரை வரவேற்று கிண்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டு உள்ளார். அவரை நேற்று வரவேற்பதற்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அதிமுக அமைச்சர்கள், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மற்றும் முக்கிய நிர்வாகிகள் விமான நிலையம் சென்றனர்.
கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல் - புத்தகம்
வெங்கையா நாயுடு, துணை குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற இந்த இரண்டு ஆண்டுகளில் 330 பொது நிகழ்வுகளில் கலந்து கொண்டிருக்கிறார். 4 கண்டங்களில் உள்ள 19க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். மாநிலங்களவை தலைவராகவும் செயல்பட்டு வரும் இவரின் பணிகளை ஆவணம் செய்து வைத்திருக்கிறது மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை. கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல் என்ற தலைப்பில் இந்த புத்தகம் உருவாகியுள்ளது.
மேலும் படிக்க : காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக பொறுப்பேற்றார் சோனியா காந்தி!
Rajini in Venkaiah Naidu book launch event
வெங்கையா நாயுடு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினி காந்த் “மக்கள் மீது மிகவும் அக்கறை கொண்ட வெங்கைய நாயுடு 45 ஆண்டுகளுக்கு பிறகும் என்னை நினைவில் வைத்துள்ளார்” என்று கூறியுள்ளார். மேலும் வெங்கையா நாயுடு ஒரு ஆன்மிகவாதி. அவர் அரசியல் தலைவராக வந்தது ஆச்சரியம் என்று கூறியுள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் அமித் ஷாவிற்கு வாழ்த்துகள் கூறிய ரஜினி, காஷ்மீரை இரண்டாக பிரிக்க மத்திய அரசு எடுத்த முடிவு சிறப்பானது என்றும் கூறியுள்ளார். அமித் ஷாவும், பிரதமர் மோடியும் கிருஷ்ணன் - அர்ஜூனன் போன்றவர்கள் என்று பேசியுள்ளார் ரஜினி.
இன்று தமிழகத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள
Amit Shah on Venkaiah Naidu book launch
மோடி அரசின் நடவடிக்கைகள் உலக அரங்கில் கவனம் பெறுகிறது - வெங்கைய நாயுடு
தன்னுடைய புத்தக விழாவிற்கு சென்னை வந்துள்ள துணை குடியரசு தலைவர் வெங்கைய நாயுடு பேசி வருகிறார். அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்குவதாக கூறிய அவர், அரசியலில் இருந்து நான் ஓய்வு பெற்றுவிட்டாலும், பொதுவாழ்வில் இருந்து இன்னும் ஓய்வு பெறவில்லை என்று கூறினார். மேலும் பொதுவாழ்வில் இருக்கும் நபர்கள் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். மோடி அரசின் ஒவ்வொரு நடவடிக்கையையும் உலகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றும் அவரின் செயல்பாடுகளை உலக நாடுகள் பாராட்டுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.