/tamil-ie/media/media_files/uploads/2022/08/tamil-indian-express-2022-08-06T105411.598.jpg)
Mettupalayam Bhavani river flood - 2 youth trapped and rescued
ரகுமான், கோவை
மேட்டுப்பாளையம் நெல்லித்துறை அடுத்த விளாமரத்தூர் பகுதிக்கு நேற்று காலை 11:30 மணிக்கு காரமடை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த நண்பர்கள் இருவர் தனது இருசக்கர வாகனத்தில் பவானி ஆற்றுப்பகுதிக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில், பருவமழை காரணமாக பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது. ஆற்றின் கரை ஓரத்தில் இருந்த இருவரும் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர்.
இது குறித்து மேட்டுப்பாளையம் காவல்துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் உதவி ஆய்வாளர் செல்வநாயகம் தீயணைப்பு நிலை அதிகாரி பாலசுந்தரம் ஆகியோர் ஆற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட இரு நண்பர்களை மூன்று மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்டனர்.
#WATCH || பவானி வெள்ளத்தில் சிக்கிய 2 இளைஞர்கள்; 3 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு!https://t.co/gkgoZMIuaK | #Tamilnadu | #FloodRelief | #Bhavanipic.twitter.com/QytVJuhcIQ
— Indian Express Tamil (@IeTamil) August 6, 2022
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.