இந்தியாவில் வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில் நாளை சுய ஊரடங்கு உத்தரவிற்கு அழைப்பு விடுத்துள்ளார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. அவரின் இந்த உத்தரவிற்கு அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு தரவேண்டும் என நட்சத்திரங்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை அனைவரும் தங்களின் வேண்டுகோள்களை மக்கள் மத்தியில் வைக்கத் துவங்கி உள்ளனர். இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியை தற்போது மேற்கொண்டுள்ளார் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் சுய ஊரடங்கு உத்தரவிற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் படிக்க : கடைசில சரிஞ்சு போன இந்திய எக்கானமிய எம்மேல கட்டிட்டாங்கப்பா… புலம்பும் கொரோனா!
கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள நாடுகளில் இந்தியா 2வது நிலையில் உள்ளது. வெளியில், மக்கள் நடமாடும் பகுதிகளில் இருக்கும் இவ்வைரஸ் 12 முதல் 14 மணி நேரம் பரவாமல் இருந்தாலே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம். அதனால் தான் பிரதமர் நரேந்திர மோடி ஜனதா கர்ஃப்யூ என்ற பெயரில் ஊரடங்கு உத்தரவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இத்தாலியிலும் இது போன்று ஸ்டேஜ் 2-ல் இருந்து ஸ்டேஜ் மூன்றுக்கு பரவாமல் தடுக்க ஊரடங்கு அழைப்பு விடுத்தது. ஆனால் அதனை மக்கள் உதாசீனப்படுத்தினார்கள். அதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அதே போன்ற நிலை இந்தியாவுக்கும் வந்துவிட கூடாது. எனவே சிறியவர்கள், பெரியவர்கள் முதற்கொண்டு அனைவரும், இந்த ஊரடங்கு உத்தரவிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம்.
பிரதமர் கேட்டுக் கொண்டது போல், நாளை மாலை (22/03/2020) இந்த கொரோனா பரவலை தடுக்க உயிரையும் பணயம் வைக்கும் மருத்துவர்கள், மருத்துவ குழுக்கள், மருத்துவ பணியில் ஈடுபட்டிருக்கும் அனைவரையும் மனதார வாழ்த்துவோம். அவர்களின் குடும்பம் நன்றாக இருக்க இறைவனை வேண்டிக்கொள்வோம் என்றும் அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்.