Thirumavalavan | “மதத்தின் பெயரால் மக்களை பிளவுப்படுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சி.ஏ.ஏ) எதிராக மார்ச் 15ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர், “குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ) மதசார்ப்பின்மையை சிதைக்கும்; மதத்தின் பெயரால் மக்களை பிளவுப்படுத்தும்.
மேலும் இந்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டும். இதன் மூலம் பாரதிய ஜனதா ஆதாயம் பெற நினைக்கிறது.
இதனை கண்டித்து தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மார்ச் 15ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தும்” எனத் தெரிவித்துள்ளார்.
2019 டிசம்பரில் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட குடியுரிமை (திருத்தம்) சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளை உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை (மார்ச் 11,2024) அறிவித்தது.
லோக்சபா தேர்தல் அட்டவணை அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாகவே இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
இது குறித்து அமித் ஷா, ட்விட்டர் எக்ஸ் பதிவில், “குடியுரிமை (திருத்த) விதிகள், 2024 ஐ மோடி அரசாங்கம் இன்று அறிவித்தது. இந்த விதிகள் இப்போது பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் மத அடிப்படையில் துன்புறுத்தப்படும் சிறுபான்மையினரை நம் நாட்டில் குடியுரிமை பெற உதவும்” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“