திருச்சி மாவட்டம், மனப்பாறையில், சுய உதவிக்குழுவுகு தாட்கோ மூலம் வழங்கப்பட்ட நிதியுதவி ரூ.5 லட்சத்தை விடுவிக்க வட்டார இயக்க மேலாளர் சுய உதவிக்குழு பெண்ணிடம் லஞ்சம் லஞ்சம் பெறும்போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இயங்கி வரும் ஊரக வாழ்வாதார இயக்கம் வட்டார இயக்க மேலாண்மை அலகில் மகளிர் சுயவுதவிக்குழுவிற்கு தாட்கோ மூலம் வழங்கப்பட்ட நிதியுதவி ரூ.5 லட்சத்தை விடுவிக்க கண்ணுடையாம்பட்டி யில் 12 பேர் கொண்ட மலர் சுய உதவிக்குழுவினரிடம் வட்டார இயக்க மேலாளர் மல்லிகா ரூ.12 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
லஞ்சம் கொடுக்க விரும்பாத குழு தலைவி ராஜலெட்சுமி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்,
புகாரின்பேரில் இன்று நிகழ்விடத்துக்கு சென்ற டி.எஸ்.பி மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸார், லஞ்சம் பணம் ரூ.12 ஆயிரத்தை ராஜலெட்சுமி, வட்டார இயக்க மேலாளர் மல்லிகா என்பவரிடம் கொடுத்தபோது மறைந்திருந்த போலீஸார் கையும் களவுமாக பிடித்து மல்லிகாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”