கன்னியாகுமரி மாவட்டம் பொதுப்பணித்துறையில் உதவியாளராக பணிபுரிந்து தற்போது அயல் பணியாக மீன்வளத் துறையில் பணிபுரிந்து வரும் மகேஷ் என்பவரது வீட்டில் குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பொதுப்பணித்துறையில் உதவியாளராக பணிபுரிந்து தற்போது அயல் பணியாக மீன்வளத் துறையில் பணிபுரிந்து வரும் மகேஷ் என்பவரது வீட்டில் குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
2013 - 2022 வரையான காலகட்டங்களில் வருமானத்துக்கு அதிகமாக சுமார் இரண்டரை கோடி ரூபாய் அளவில் சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் நாகர்கோவில் அருகே சிவந்தி ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே கேசவன் புதூரில் உள்ள அவரது வீட்டில் இன்று (17-11-2023) காலை முதல் தற்போது வரை சோதனை நடைபெற்று வருகிறது.
லஞ்சம் வாங்கிய பணத்தில் பல வீடுகள் கட்டியுள்ளதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. சுமார் 12 வருடங்களுக்கு முன் லஞ்ச ஒழிப்பு துறை வழக்கில் சிக்கிய தக்கலை மதுவிலக்கில் பணிபுரிந்த கணேசன் என்பவரது மருமகன் மகேஷ் என்று கூறப்படுகிறது. சோதனையின் முடிவில் தான் மேலும் கூடுதலாக வருமானத்துக்கு அதிகமாக எவ்வளவு சொத்து சேர்த்துள்ளார் என்ற அனைத்து விவரங்களும் தெரிய வரும் என்று கூறப்படுகிறது. முக்கிய பிரமுகர்களுடன் நேரடி தொடர்பு வைத்துள்ளதாகவும் அதன் மூலம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“