காரைக்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தியதில், ரூ.60,000 லஞ்சம் பெற்ற சப் ரிஜிஸ்டர் (பொறுப்பு) மற்றும் ஆவண எழுத்தர் ஆசிய இருவர் கைது வெள்ளிக்கிழமை (நவம்பர் 15) செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்டனூர் ரோடு பகுதியை சேர்ந்த வைரவேல் என்பவர் தனது சொத்தை விற்பனை செய்ய பத்திரப்பதிவு சார் பதிவாளர் அலுவலகத்திற்க்கு சென்றுள்ளார். பொறுப்பு அலுவலர் முத்துப்பாண்டி பத்திர பதிவு செய்ய ரூ 60 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. பத்திரம் பதிவு செய்த பின்னர் கூறியதை தொடர்ந்து பத்திரப்பதிவு நடைபெற்றது. ஆனால், லஞ்ச பணம் கொடுக்காததால் பத்திரத்தை தர மறுத்ததால் ஆத்திரமுற்ற வைரவேல் சிவகங்கை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து, இன்று அவர்களின் வழிகாட்டலின்படி ரசாயனம் தடவிய ரூ.60,000-தை பத்திர எழுத்து புவனப்ரியாவிடம் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறை டி.எஸ்.பி ஜான் பிரிட்டோ தலைமையிலான போலீசார், சார் பதிவாளர் முத்துப்பாண்டி ஆவண எழுத்தர் புவனப்பிரியா ஆகியோரை கையும் களவுமாக பிடித்தனர். இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த லஞ்ச ஒழிப்ப்பு போலீசார் மேல்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“