அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை மீண்டும் சோதனையை தொடங்கியுள்ளனர்.
கடந்த 15ம் தேதி முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது. இச்சோதனையில் ரூ.2.37 கோடி ரொக்கம், 1 கிலோ 130 கிராம் தங்கம், 40 கிலோ வெள்ளி மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், கைப்பேசிகள், பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், கணினி ஹார்டு டிஸ்க்குகள் கைப்பற்றப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று, தங்கமணிக்கு சொந்தமான 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனையை தொடங்கியுள்ளனர். நாமக்கலில் 10 இடங்கள், ஈரோட்டில் 3 இடங்கள், சேலத்தில் ஒரு இடத்திலும் சோதனை நடைபெறுகிறது.இது அதிமுக வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil