நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி உள்ளார். இதன் முதல் மாநில மாநாடு கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது. இதில் கட்சி கொள்கைகள் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதோடு 2026 சட்டமன்றத் தேர்தல் இலக்கு என்று கூறினார். சினிமாவை விட்டு முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்தார். விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். திரைத் துறையின் உச்சத்தில் உள்ளார். அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் உள்ளார்.
இந்நிலையில் நடிகர் விஜய் திரைத்துறைக்கு வந்து 33 ஆண்டுகள் ஆகிறது. இன்று டிசம்பர் 4-ல் தமிழ் திரை உலகில் 33-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறார். இதையொட்டி மகளிர் அணி நிர்வாகிகள் மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் தங்கத்தேர் இழுத்து, அன்னதானம் வழங்கி வழிபாடு செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“