/tamil-ie/media/media_files/uploads/2019/05/vijay-2.jpg)
அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா, யோகிபாபு நடிப்பில் உருவாகி வரும் புதுப்படத்தின் இதுதான் என்று கோலிவுட் வட்டாரத்தில் ஒருபுதுத்தகவல் உலவிவருகிறது.
தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து விஜய் - இயக்குனர் அட்லீ மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் விஜய் 63. இந்த படத்தில், விஜய் கால்பந்தாட்ட வீரர் மற்றும் கால்பந்தாட்ட பயிற்சியாளர் என இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை, சன்பிக்சர்ஸ் நிறுவனம் ரூ.28 கோடிக்கு தன்வசப்படுத்தியுள்ளது. தமிழ்படத்தின் சாட்டிலைட் உரிமை, இந்தளவிற்கு அதிக மதிப்பில் விற்பனையானது இதுவே முதல்முறை என்ற சாதனையை, படம் வெளிவருவதற்கு முன்பே, விஜய் 63 படம் நிகழ்த்தியுள்ளது.
இதனிடையே, விஜய் - அட்லீ காம்போவில் உருவாகி வரும் படத்திற்கு வெறித்தனம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை மறுக்கும்விதமாக, படத்தில் விஜயின் கேரக்டர் பெயர் கிளமண்ட் மைக்கேல் (Clement Michael) என்றும் அதை சுருக்கி CM என்று படத்தின் டைட்டில் வைத்திருப்பதாக மற்றொரு தகவலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
படக்குழு, டைட்டில் விவகாரத்தில் இதுவரை எந்த தகவலையும் உறுதிப்படுத்தவில்லை. விஜயின் பிறந்தநாளான வரும் 22ம் தேதி, படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.