விஜய் கூட்ட நெரிசல் சோகம்: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம்; அடுத்த வார பயணத்திட்டம் ரத்து

கரூரில் த.வெ.க தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேர்களின் குடும்பத்தினருக்கு த.வெ.க தலைவர் விஜய் ரூ.20 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

கரூரில் த.வெ.க தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேர்களின் குடும்பத்தினருக்கு த.வெ.க தலைவர் விஜய் ரூ.20 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Vijay stampede 2

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற த.வெ.க தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில், நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர், 51 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கோர சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற த.வெ.க தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில், நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர், 51 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கோர சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. 

Advertisment

இந்த துயரச் சம்பவத்தால் த.வெ.க தலைவர் விஜய் சொல்லொன்னாத் துயரத்தில் ஆழ்ந்திருப்பதாக வருத்தமும் வேதனையும் தெரிவித்துள்ளார். முதலைமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தனர். 

இந்நிலையில், கரூரில் விஜய்யின் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேர்களின் குடும்பத்தினருக்கு த.வெ.க தலைவர் விஜய் ரூ.20 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். மேலும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா ரூ.2 லட்சம் அளிப்பதாக அறிவித்துள்ளார். 

Advertisment
Advertisements

இது குறித்து விஜய் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது: “என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.

கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன்.

நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது.

என் சொந்தங்களே… நம் உயிரனைய உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிற அதே வேளையில், இப்பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்துகொள்கிறேன். 

நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான். இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்ச ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன். இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான். இருந்தும், இந்த நேரத்தில், என்னுடைய உறவுகளான உங்களுடன் மனம்பற்றி நிற்க வேண்டியது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக என் கடமை.

அதேபோல, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் நம் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகச் செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம்.” என்று விஜய் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நடிகர் விஜய் அடுத்த வாரம் திட்டமிட்டிருந்த தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: