/indian-express-tamil/media/media_files/2025/09/14/vijay-tvk-ariyalur-2025-09-14-11-13-51.jpg)
பழைய மாநாடு ஒன்றில், தே.மு.தி.க தலைவர் கேப்டன் விஜயகாந்த் என்னய்யா காசு காசு பெரிய காசு என்று பேசியதை நினைவுபடுத்தும் வகையில் அமைந்த நிலையில், விஜி தம்பி என்று சொன்னது, விஜய் தன்னை விஜயகாந்த் தம்பி என்று தெரியப்படுத்த பேசுவது போல் இருப்பதாக கூறி வருகின்றனர்.
திருச்சியில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கிய விஜய், அறிஞர் அண்ணா, முதன் முதலில் தேர்தலில் போட்டியிடும்போது, தனது பிரச்சரத்தை திருச்சியில் இருந்து தான் தொடங்கினார். அது 1956 காலகட்டம். அதேபோல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தனது அரசியல் பிரச்சாரத்தை திருச்சியில் இருந்து தொடங்கினார் என்று கூறியிருந்தார்.
திருச்சியில் பிரச்சாரத்தை முடித்த விஜய், அதனைத் தொடர்ந்து அரியலூரில் பேசினார். அப்போது அரியலூர் வருவதற்கு தாமதமாகிவிட்டது என்று கூறி மன்னிப்பு கேட்டு பேச தொடங்கிய விஜய், என்னங்க பெரிய பணம், வேணாம்கிற அளவுக்கு பாத்தாச்சு. அரசியலுக்கு வந்து தான் நான் பணம் சம்பாதிக்க வேண்டுமா என்ன? அதுக்கு அவசியமே இல்லை. எனக்கு எல்லாமும் எல்லா நேரமும் கொடுத்த உங்களுக்காக உழைக்கிறதை தவிர எனக்கு வேறு எந்த எண்ணமும் வேலையும், எதுவும் இல்லை.
விஜய், விஜய் அண்ணா, விஜி தம்பி, நண்பன் விஜய் என்னடா இந்த விஜி தனி ஆளா இருப்பான் என்று பார்த்தால், எப்போ பாரு மக்கள் கடலொட மக்கள் கடலாகவே இருக்கிறானே என்று நமது எதிரிகள் தெரிந்துகொண்டு கண்ணாபின்னா என்று பேச தொடங்கி இருக்கிறார்கள். நான் மரியாதையாக பேசினால் கூட அதை தவறாக எடுத்துக்கொள்கிறார்கள். யார் என்ன சொன்னாலும் அறிஞர் அண்ணா அவர்கள் சொன்ன பஞ்ச் தான். வாழ்க வசவாளர்கள் என்று சொல்லிவிட்டு போய்க்கொண்டே இருக்க வேண்டியது தான்.
மேலும், ஓட்டு திருட்டு நடந்துள்ளது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்று கொண்டு வர நினைக்கிறார்கள். 2029-ல் பா.ஜ.க. ஆட்சி முடிவுக்கு வந்துவிடும். அதன்பிறகு ஒரே நாடு ஓரே தேர்தல் நடத்தி இந்த ஓட்டு திருட்டை மீண்டும் கொண்டுவர நினைக்கிறார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் செட் ஆகாது. அப்படி வந்தால் அது தில்லு முல்லுக்கு தான் வழி செய்யும்.
தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகள் ஒன்றையும் நிறைவேற்றவில்லை. ஆனால், நிறைவேற்றிவிட்டோம் என்று ரீல் சுற்றுகிறார்கள். நீங்களே இப்படி ரீல் சுற்றலாமா மை டியர்... வேண்டாம். நான் ஆசையா அன்பா கூப்பிட்டால் கூட, தவறாக நினைத்துக்கொள்கிறார்கள். மை டியர் சி.எம். சார். பொய் வாக்குறுதிகளை கொடுப்பதில், தி.மு.க. பா.ஜ.க. இரண்டும் ஒரே வகையறா தான்.
பா.ஜ.க செய்வது துரோகம் என்றால், தி.மு.க அரசு நம்மை நம்பவைத்து ஏமாற்றுகிறார்கள். ரீல்ஸ் வேற ரியாலிட்டி வேற என்று நீங்களே சொல்லிவிட்டு, இப்போது நீங்கள் சொல்வது அனைத்தும் ரீல்ஸ்தான். இதற்கு பெயர் நம்பிக்கை மோசடி, மக்களை ஏமாற்றுவதில் இவர்கள் இரண்டு பேரும் ஒரே வகையறாதான்.” என்று விஜய் பேசினார்.
அதன்பின், அனைத்து தரப்பு மக்களையும் சார்ந்துள்ள பிரச்சினைகளைக் குறித்து தி.மு.க வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகளையும், அதை அவர்கள் நிறைவேற்றவேயில்லை என்றும் விஜய் சுட்டிக்காட்டிப் பேசினார்.
அரியலூர் மாவட்டப் பிரச்னைகளையும் பட்டியலிட்டுப் பேசிய விஜய், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் போக்குவரத்து அமைச்சராக இருந்தும் போதிய பேருந்து வசதிகள் இங்கு செய்யப்படவில்லையே, ஏன்? என்று கேள்வியெழுப்பினர்.
பா.ஜ.க-வுடன் மறைமுக உறவை தி.மு.க கொண்டிருப்பது தெளிவாக வெளிப்படுவதாகவும் விஜய் குறிப்பிட்டார்.
பழைய மாநாடு ஒன்றில், தே.மு.தி.க தலைவர் கேப்டன் விஜயகாந்த் என்னய்யா காசு காசு பெரிய காசு என்று பேசியதை நினைவுபடுத்தும் வகையில் அமைந்த நிலையில், விஜி தம்பி என்று சொன்னது, விஜய் தன்னை விஜயகாந்த் தம்பி என்று தெரியப்படுத்த பேசுவது போல் இருப்பதாக கூறி வருகின்றனர்.
தமது உரையை நிறைவுசெய்யும் முன், “சரி வந்ததிலிருந்து அடுக்கடுக்காகக் கேள்வியெழுப்பும் நான் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வேன் என்பதைச் சொல்கிறேன் இப்போது. ‘தீர்வை நோக்கி போவதும், தீர்வு காண்பதுமே நம்ம த.வெ.க-வின் லட்சியம். நம்முடைய தேர்தல் அறிக்கையில் இதற்கான விளக்கத்தை ரொம்ப தெளிவாகச் சொல்லுவோம்.’ஆனால், அதற்கு முன்னாடி, ‘அதைச் செய்வோம், இதைச் செய்வோம்’ என்று பொய்யான வாக்குறுதிகளை கொடுக்க மட்டோம். எது நடைமுறைக்கு சாத்தியமோ, எது உண்மையோ அதை மட்டுமே தேர்தல் வாக்குறுதியாகக் கொடுப்போம். அதிலும், பெண்களின் பாதுகாப்பு, சட்டம் - ஒழுங்கு உள்ளிட்ட அடிப்படி விஷயங்களில் சமரசம் செய்யவே மாட்டோம். ஏழ்மை, வறுமை இல்லாத தமிழகம், குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழகம், ஊழல் இல்லாத தமிழகம், உண்மையான மக்களாட்சி; மனசாட்சியுள்ள மக்களாட்சி. நம்பிக்கையுடன் இருங்கள். நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்” என்றார்.
அரியலூரில் இதனைத்தொடா்ந்து அங்கிருந்து, கல்லங்குறிச்சி சாலை வழியாக புறவழிச்சாலை சென்று பெரம்பலூா் மாவட்டம் குன்னம் சென்றார். அங்கு இரவு 10 மணியை கடந்ததால் பிரச்சாரம் செய்யாமல் கை அசைத்து விட்டு கடந்து சென்றார். பெரம்பலூர் நெருங்கும்போது நள்ளிரவே தாண்டியதால் பெரம்பலூரில் காத்திருந்த பொதுமக்கள், தொண்டர்கள் கடும் ஏமாற்றத்தை சந்தித்தனர் .
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.