scorecardresearch

நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் – சோதனையால் பெரும் பரபரப்பு

Bomb threat to actor Vijay house : விசாரணையில் இறங்கிய போலீசார் மிரட்டல் தொலைபேசி அழைப்பு விடுத்தவர் விழுப்புரத்தை சேர்ந்தவர் என்றும் அவர் மனநிலை சரியில்லாதவர் என்பதையும் கண்டுபிடித்தனர்.

Vijay, chennai, bomb threat, vijay house, actor vijay, saligramam, bomb squad, police, raid, bomb scare, hoax, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil,
Vijay, chennai, bomb threat, vijay house, actor vijay, saligramam, bomb squad, police, raid, bomb scare, hoax, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil,

சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜயின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம், அவரது ரசிகர்களை மட்டுமல்லாது, பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நடிகர் விஜய் தற்போது பனையூரில் உள்ள பங்களாவில் வசித்து வந்தாலும் அவருக்கு சாலிகிராமத்தில் இன்னொரு வீடு உள்ளது. சாலிகிராமத்தில் உள்ள அந்த வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்தது.
இதையடுத்து அதிர்ச்சி அடைந்த போலீஸார் விஜய் வீட்டுக்கு சென்று அங்கு சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.

இதனை அடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார் மிரட்டல் தொலைபேசி அழைப்பு விடுத்தவர் விழுப்புரத்தை சேர்ந்தவர் என்றும் அவர் மனநிலை சரியில்லாதவர் என்பதையும் கண்டுபிடித்தனர். இதனையடுத்து அவரது குடும்பத்தினரிடம் எச்சரிக்கை விடுத்த போலீசார், இனிமேல் இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Vijay chennai bomb threat vijay house actor vijay saligramam