எல்லை தாண்டிய தல – தளபதி ரசிகர்கள் சண்டை! கத்தி குத்தில் முடிந்த விபரீதம்.

அடுத்த நொடியே உமாசங்கர் ரத்தவெள்ளத்தில் சரிந்தார்

By: Updated: July 31, 2019, 02:27:50 PM

vijay fans trends : அதி தீவிரமாக சென்ற விஜய் – அஜித் ரசிகர்கள் சண்டை கத்தி குத்தில் முடிந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் தற்போதைய ரசிகர்களை மொத்தமாக இரண்டே வகையாக பிரித்து விடலாம். தல – தளபதி ரசிகர்கள். இந்த லிஸ்டுக்கு கீழே வரும் ரசிகர்கள் தான் மற்ற ஹீரோக்களையும் ரசிக்கிறார்கள். ஆரம்பத்தில் வெறும் ரசிகர்களாக மட்டுமே இருந்தவர்கள் தற்போது வெறியர்களாக மாறி போனதற்கு சமூகவலைத்தளங்களும் ஒரு காரணம் தான்.

சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவது வழக்கமானது தான். தீடீரென்று இவர்கள் அடித்துக் கொள்வார்கள். திடீரென்றே இவர்களே ஒன்று சேர்ந்து கொள்வார்கள். இரண்டு தினங்களுக்கு முன்பு ட்விட்டரில் #RIPVIjay என்ற ஹேஷ்டேக் அஜித் ரசிகர்களால் ட்ரெண்ட் ஆக கூடவே விஜய் ரசிகர்கள் #LongLiveVijay என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்தனர். இந்த வாக்குவாதம் ட்விட்டர் வலைப்பக்கத்தில் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்க சென்னையில் புழலில் மற்றொரு சம்பவமும் அரங்கேறியுள்ளது.

சென்னை புழல் பகுதியை சேர்ந்த உமாசங்கர் என்ற அஜித் ரசிகரை ரோஷன் என்ற விஜய் ரசிகர் கத்தியால் குத்தியுள்ளார். தற்போது ரோஷன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த திங்கள் கிழமையன்று உமாசங்கர் மற்றும் ரோஷன் ஆகியோர் பேசிக்கொண்டிருந்த போது அஜித் ரசிகரான உமாசங்கர் விஜய் குறித்து தரக்குறைவாகப் பேசியதாகத் தெரிகிறது.ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ரோஷன், உமாசங்கரை கத்தியால் குத்தியுள்ளார்.அடுத்த நொடியே உமாசங்கர் ரத்தவெள்ளத்தில் சரிந்தார். அவரின் உடலை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அதனைத் தொடர்ந்து உமாசங்கர் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும், உமாசங்கரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கத்தியால் குத்திய ரோஷனை கைது செய்த புழல் காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அஜித் – விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதும் மேலும், பல்வேறு தரப்பில் இருந்து இதற்கு கண்ட குரல்களும் ஒலித்துள்ளன.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Vijay fans trends ajith fans twitter clash

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X