/tamil-ie/media/media_files/uploads/2018/09/New-Project-60.jpg)
விஜய்
பாலில் விஷம் வைத்து குழந்தைகளை துடிக்க துடிக்க கொலை செய்த குன்றத்தூர் அபிராமியின் கணவர் விஜய்க்கு ரஜினி மக்கள் மன்றத்தில் ஒன்றிய இணைச் செயலாளா் பதவி வழங்கப்பட்டுள்ளது.
குன்றத்தூர் விஜய்:
சென்னை குன்றத்தூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் குழந்தைகளை பாலில் விஷம் வைத்துக் கொண்ட அபிராமியின் விவகாரம் ஊர் அறிந்த ஒன்று.பிரியாணி கடைக்காரர் சுந்தரம் மீதுக் கொண்ட காதலால் அபிராமி,தனது 2 குழந்தைகளையும் பாலில் விஷம் வைத்து இரவோடு இரவாக கொலை செய்தார்.
கள்ளக்காதலுடன் தப்பி செல்ல முயன்ற அபிராமியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவத்தில் பெற்ற குழந்தைகளை இழந்து நிர்கதியாக நிற்கிறார் விஜய். மிகவும் மனமுடைந்து போன அவர், யாருடனும் பேசுவதில்லை. இந்த சம்பவத்தை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், பாதிக்கப்பட்ட விஜய்யை போயல் கார்டன் இல்லத்திற்கு அழைத்து நேரில் சந்தித்து பேசினார்.
குழந்தைகளை இழந்து தவித்து வரும் விஜய்-க்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு கூறினார். ரஜினியிடம் கதறி அழுத விஜய்க்கு ஆருதல் கூறிய ரஜினிகாந்த ‘சென்று வாருங்கள் விஜய்.. ஆண்ட துணை நிற்கிறார்” என்று வழி அனுப்பி வைத்தார்.
குன்றத்தூரில் தாயால் கொலை செய்யப்பட்ட 2 குழந்தைகளின் தந்தை விஜய்யை நேரில் அழைத்து ரஜினி ஆறுதல்.. #Thalaivar#Rajinikanth consoles the father of the two children who were killed by their mother recently at #Chennai#Kundrathurpic.twitter.com/AhHETZuUbh
— RBSI RAJINI FAN PAGE (@RBSIRAJINI) 5 September 2018
அதனைத்தொடர்ந்து தற்போது விஜய்க்கு ரஜினி மக்கள் மன்றத்தின் குன்றத்தூா் ஒன்றிய இளைஞரணி இணைச் செயலாளா் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ரஜினி மக்கள் மன்றத்தின் இணையதள பக்கத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.