/indian-express-tamil/media/media_files/fgGcbEcx8yOCLZQ72ge7.jpg)
தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைய பொதுமக்களுக்கு விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.
Vijay | தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற பெயரில் கட்சி தொடங்கினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் என்ற பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி இல்லை.
2026-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல் தான் இலக்கு என்று கூறியிருந்தார். இந்தக் கட்சி உறுதிமொழி தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
#தமிழகவெற்றிக்கழகம்#TVKMembershipDrive#TVKVijaypic.twitter.com/e4DqN18sn2
— TVK Vijay (@tvkvijayhq) March 8, 2024
அந்த வீடியோவில், “இது தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டை. வருகின்ற சட்டமன்ற தேர்தலை நோக்கி நாம் பயணிக்கிறோம்.
கட்சியின் உறுப்பினர் உறுதிமொழியை படியுங்க.. பிடிச்சி இருந்தா கட்சியில் இணையுங்கள். நன்றி” எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களாக இணைய:
— TVK Vijay (@tvkvijayhq) March 8, 2024
1) WhatsApp users - https://t.co/iw2ulVFXhG
2) TelegramApp users - https://t.co/YgMBgSnPWh
3) WebApp users - https://t.co/fqlptErSI5
4) Send WhatsApp message as 'TVK' to 09444-00-5555 pic.twitter.com/IPgiwx8mMB
நடிகர் விஜய் 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என அறிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
செயலி முடக்கம்
நடிகர் விஜய்யின் அழைப்பை ஏற்று பலரும் ஒரே நேரத்தில் சம்பந்தப்பட்ட செயலிக்கு தொடர்பு கொண்டதால், அந்த செயலி முடங்கியது. எனினும் விஜய் ரசிகர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.