/tamil-ie/media/media_files/uploads/2021/02/makkal-iyakkam.jpg)
Vijay Makkal Iyakkam Issue : விஜயின் மக்கள் இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஜெயசீலன் தற்போது இயக்கத்திற்கு எதிராக செயல்படுவதாகவும் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தனது அயராது உழைப்பினால் தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களிலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். பல வருடங்களாக ரசிகர் மன்றம் என்ற பெயரில் விஜய் ரசிகர்கள் மக்கள சேவையில் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த 2009-ம் ஆண்டு ரசிகர் மன்றம் மக்கள் இயக்கமாக மாறியது. அதனைத் தொடர்ந்து கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகுவுக்கு ஆதரவு தெரிவித்த மக்கள் இயக்கம் தனது முதல் அரசியல் அடியை எடுத்து வைத்தது.
இந்நிலையில், மக்கள் இயக்கத்தின் முன்னாள் மாநில தலைவராக இருந்த ஜெயசீலன் என்பவர், கட்சிக்கு விரோதமாக செயல்படுவதாக தற்போது குற்றச்சட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக நீலாங்கரை காவல் உதவி ஆணையர் விஷ்வேஸ்வராய்யாவை சந்தித்த மக்கள் இயக்கத்தின் காஞ்சி மாவட்டத்தின் இணைஞர் அணி தலைவர் ஈ.சி.ஆர் சரவணன் புகார் மனு அளித்தார். அந்த மனுவில், மக்கள் இயக்கத்தின் மாநிலத்தலைவராக செயல்பட்டு வந்த ஜெயசீலன், இயக்கத்திற்கு விரோதமாக களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதால், கடந்த 2011-ம் ஆண்டு நீக்கப்பட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த ஜெயசீலன், இயக்கத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில், இயக்க நிர்வாகிகள் மீது அடுக்கடுக்கான பொய்யான குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார். மேலும் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளராக இருக்கும் முன்னாள் எம்எல்ஏ புஸ்ஸி ஆனந்த், தனது சாதியை சேர்ந்த ஒருவருக்கு பதவி வழங்கியதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். அவரின் பொய்யான குற்றச்சாட்டுகளால், மக்கள் இயக்க நிர்வாகிகள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் பொய்புகார் கூறி வரும் ஜெயசீலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.
மக்கள் இயக்கநீர்வாகியின் இந்த புகார் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.