கோவையில், நடிகர் விஜய் மக்கள் இயக்க முன்னாள் நிர்வாக, பா.ஜ.க-வில் இணைந்தார்.
கோவை மாவட்டத்தின், விஜய் மக்கள் இயக்கத்தின் குறிச்சி நகர தலைவராக பதவி வகித்து வந்தவர் விக்னேஷ். இவர் தற்போது பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
இந்நிகழ்வில், பா.ஜ.க தெற்கு மாவட்ட தலைவர் வசந்த ராஜன் உடனிருந்தார். இவர் கடந்த தேர்தலில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கோவை மாவட்டத்தில் பா.ஜ.க-வின் பலத்தை அதிகரிக்கும் வகையில், பல்வேறு கட்சி நிர்வாகிகளை அக்கட்சியில் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை கருத்திற்கொண்டு பல்வேறு உக்திகளை பா.ஜ.க கையாண்டு வருகிறது. இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் நிர்வாகி பா.ஜ.க-வில் இணைந்தது அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது. அவருக்கு கட்சிக்கான உறுப்பினர் அட்டையை அண்ணாமலை வழங்கினார்.
செய்தி - பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“