உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டி; சுயேச்சையாக போட்டியிட விஜய் அனுமதி?

Vijay makkal iyakkam officials allowed to contest local body elections: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சுயேச்சையாக போட்டியிட அனுமதி என நிர்வாகிகள் கூட்டத்திற்கு பின் தகவல்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சுயேச்சையாக போட்டியிட நடிகர் விஜய் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையை அடுத்துள்ள பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த்தின் தலைமையில், தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட, 20 மாவட்ட நிர்வாகிகளுடன் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் அனைவரிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டன.

இந்த கூட்டத்தில், விரைவில் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் விஜய் மக்கள் இயக்கத்தினர் சுயேச்சையாக போட்டியிட்டுக் கொள்ளலாம் என மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் மாவட்ட நிர்வாகிகளில் சிலர், ஏற்கனவே நடைபெற்ற தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் சுயேச்சையாக போட்டியிட்டு, வெற்றியும் பெற்றுள்ளனர். தற்போது நடைபெற உள்ள தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டமாக இந்த ஏற்பாடு கருதப்படுகிறது. கடந்த வருடம் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி ஒன்றை பதிவு செய்தார். ஆனால் அப்போதே, இதற்கும் நடிகர் விஜய்க்கும் எந்த சம்பந்தம் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay makkal iyakkam officials allowed to contest local body elections

Next Story
சென்னையில் ஜேப்பியார் குழுமம் ஆக்கிரமித்த 91.4 ஏக்கர் நிலம் மீட்பு; தமிழக அரசு நடவடிக்கை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X