/indian-express-tamil/media/media_files/2025/01/20/q4eGYPoavqyuYXAldNrZ.jpg)
பரந்தூரில் விஜய்
Vijay Meets Protesters In Parandur Updates: பரந்தூரில் விமான நிலையத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் மக்களை த.வெ.க தலைவர் விஜய் இன்று (20-01-2025) சந்தித்து பேசினார்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் பிரச்சார வாகனத்தில் இருந்து பேசிய விஜய், “விமான நிலையத்திற்கு வேறு இடத்தை ஆய்வு செய்ய வேண்டும். விவசாய நிலம் இல்லாத இடத்தில் விமான நிலையத்தை கொண்டு வாருங்கள் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன். நான் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல. போராடும் விவசாயிகளுடன் நான் எப்போதும் உறுதியாக நிற்பேன். வளர்ச்சி என்ற பெயரில் நடக்கும் அழிவுகள் மக்களை பாதிக்கும். விமான நிலையம் வேண்டாம் என்று சொல்லவில்லை, இங்கே வேண்டாம். இந்த திட்டத்தால் அவர்களுக்கு ஏதோ ஒரு லாபம் இருக்கிறது. இயற்கை வளம் பாதுகாப்பு த.வெ.க கொள்கையாக உள்ளது, என்று கூறினார்.
முன்னதாக, பரந்தூர் விமான நிலையம் அமையவுள்ள கிராமங்களின் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும். சட்டம் ஒழுங்கைப் பேண காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். திட்டமிட்டபடி காலை 11.30 மணி முதல் 12.30 மணிக்குள் நிகழ்ச்சியை நடத்தி முடிக்க வேண்டும். பொதுமக்களுக்கோ, பொதுச்சொத்திற்கோ பாதிப்பு ஏற்படாத வகையில் நடந்துக்கொள்ள வேண்டும் என காவல்துறை நிபந்தனை விதித்து இருந்தது.
-
Jan 20, 2025 15:32 IST
விளம்பரத்திற்காக விஜய் பரந்தூர் வந்திருப்பது சரியாக இருக்காது - தமிழிசை சௌந்தரராஜன்
விஜய்யின் வருகை ஏன் தாமதமானது என்பதை சிந்திக்க வேண்டும். வளர்ச்சியை விரும்பும் மத்திய அரசு மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்காது. இதற்கு டங்ஸ்டன் ஒரு உதாரணம். விமான நிலைய திட்டம் விவசாயிகளுக்கு எதிரானது இல்லை என்பதில் கவனமாக இருக்கிறோம். தமிழக அரசு தேர்வு செய்த இடத்தை தான் இறுதி செய்துள்ளோம்.
விஜய் இந்த மக்களுக்கு இழப்பீடு அதிகம் வழங்குங்கள் என்று கூறினால், ஏற்றுக் கொள்ளலாம். ஹைதராபாத் விமான நிலையம் அம்மாநில வளர்ச்சி பெரிய அளவில் உதவுகிறது. அதேநேரம் தன்னுடைய சுயநலத்திற்காக, விளம்பரத்திற்காக விஜய் பரந்தூர் வந்திருப்பது சரியாக இருக்காது என பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
-
Jan 20, 2025 15:24 IST
விஜய்யின் பரந்தூர் பயணம் மாற்றத்தைக் குறிக்கிறது – பூவுலகின் நண்பர்கள்
விஜய்யின் பரந்தூர் பயணம் தமிழகத்தில் சுற்றுசூழல் பிரச்சனைகள் மைய விவாதமாக மாறி வருவதை குறிக்கிறது. பரந்தூர் விமான நிலையம் தேவையற்றது. திட்டத்திற்கான 90% இடம் சதுப்பு நிலமாக உள்ளது என பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
-
Jan 20, 2025 15:19 IST
சிறுவன் ராகுலின் பேச்சைக் கேட்டு பரந்தூர் வந்ததாக த.வெ.க தலைவர் விஜய் பேச்சு
சிறுவன் ராகுலின் பேச்சைக் கேட்டு பரந்தூர் வந்ததாக த.வெ.க தலைவர் விஜய் கூறியுள்ள நிலையில், ராகுல் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. விமான நிலையம் வந்தால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எங்களுக்கு படிப்பும், வயல் வெளியும் முக்கியம் என ராகுல் கூறியுள்ளார்
-
Jan 20, 2025 15:15 IST
டங்ஸ்டன் சுரங்கத்திற்கான சூழல் வேறு, பரந்தூர் சூழல் வேறு; விஜய்க்கு தி.மு.க பதில்
டங்ஸ்டன் சுரங்கத்திற்கான சூழல் வேறு, பரந்தூர் சூழல் வேறு. டங்ஸ்டன் விவகாரம் மாநில உரிமை சார்ந்தது. ஆனால் விமான நிலையத்திற்கு அதே நிலைப்பாட்டை எடுக்க முடியாது. விவசாய நிலத்தை விட்டுக்கொடுப்பதில் பரந்தூர் மக்களுக்கு உணர்வுப்பூர்வமான சிக்கல் இருக்கலாம். பெங்களூர், ஹைதராபாத் விமான நிலையங்கள் விரிவடைந்து விட்டன. ஆனால் நம்மால் விரிவாக்கம் செய்ய முடியவில்லை. விரிவாக்கம் செய்யப்பட்டால், வேலை வாய்ப்பு, வளர்ச்சி ஏற்படும்.
இரட்டை வேடம் போடவில்லை. 8 வழிச்சாலை திட்டம் மக்கள் ஒத்துழைப்போடு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். விஜய்யின் கேள்விகளுக்கு 2 நாட்களுக்கு முன்னரே அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துவிட்டார். இவ்வாறு தி.மு.க.,வைச் சேர்ந்த ரவீந்திரன் தெரிவித்துள்ளார்
-
Jan 20, 2025 14:56 IST
விஜய் அப்படித்தான் பேசுவார்... அப்பறம் பேசிக்கலாம் இதலாம் - அமைச்சர் பொன்முடி
பரந்தூரில் த.வெ.க தலைவர் விஜய் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்களைச் சந்தித்து, மத்திய மாநில அரசுகள் நாடகம் போடுவதாக கூறியது பற்றி அமைச்சர் பொன்முடியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “அவர் அப்படித்தான் பேசுவார்... அப்பறம் பேசிக்கலாம் இதலாம்” என அமைச்சர் பொன்முடி பதிலளித்துள்ளார்
-
Jan 20, 2025 14:54 IST
சென்னை மற்றொரு விமான நிலையம் வேண்டும் – அமைச்சர் மா.சு
சென்னைக்கு மற்றொரு விமான நிலையம் 15 ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்க வேண்டும். பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கொடுப்பவர்களுக்கு அதிக இழப்பீடு கொடுக்க உள்ளோம். பொருளாதார வளர்ச்சி வேண்டுமென்றால் சூழலியல் பாதிப்பு சிறிது இருக்கத்தான் செய்யும் செய்யும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
Jan 20, 2025 14:45 IST
பரந்தூர் மக்களை விஜய் சந்திப்பது, அவரின் தனிப்பட்ட விருப்பம் - வைகோ
விமான நிலையத்துக்கு எதிராக போராடி வரும் பரந்தூர் மக்களை விஜய் சந்திப்பது, அவரின் தனிப்பட்ட விருப்பம் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்
-
Jan 20, 2025 14:38 IST
விவசாய நிலம் இல்லாத இடத்தில் விமான நிலையத்தை கொண்டு வாருங்கள் - விஜய்
விமான நிலையத்திற்கு வேறு இடத்தை ஆய்வு செய்ய வேண்டும்; விவசாய நிலம் இல்லாத இடத்தில் விமான நிலையத்தை கொண்டு வாருங்கள் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன் என பரந்தூரில் த.வெ.க தலைவர் விஜய் பேசியுள்ளார்
-
Jan 20, 2025 14:07 IST
"நான் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல" – த.வெ.க தலைவர் விஜய்
நான் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல. போராடும் விவசாயிகளுடன் நான் எப்போதும் உறுதியாக நிற்பேன். வளர்ச்சி என்ற பெயரில் நடக்கும் அழிவுகள் மக்களை பாதிக்கும். விமான நிலையம் வேண்டாம் என்று சொல்லவில்லை, இங்கே வேண்டாம். இந்த திட்டத்தால் அவர்களுக்கு ஏதோ ஒரு லாபம் இருக்கிறது. இயற்கை வளம் பாதுகாப்பு த.வெ.க கொள்கையாக உள்ளது என பரந்தூரில் த.வெ.க தலைவர் விஜய் பேசியுள்ளார்
-
Jan 20, 2025 13:43 IST
"விவசாயிகளின் காலடி மண்ணை தொட்டு, என் கள அரசியலை தொடங்குகிறேன்" – விஜய்
விவசாயிகளின் காலடி மண்ணை தொட்டு கும்பிட்டுதான், என்னுடைய பயணத்தை தொடங்க வேண்டும் என ஒரு முடிவோடு இருந்தேன் என பரந்தூரில் த.வெ.க தலைவர் விஜய் கூறியுள்ளார்
-
Jan 20, 2025 13:35 IST
ஓட்டு அரசியலுக்காக இதை நான் பேசவில்லை; பரந்தூரில் த.வெ.க தலைவர் விஜய் பேச்சு
910 நாட்களுக்கு மேலாக மண்ணிற்காக போராடி வருகிறீர்கள். உங்கள் போராட்டம் பற்றி சிறுவன் பேசியதை கேட்டேன். என்னுடைய பயணத்தை தொடங்க இது தான் சரியான இடம். ஓட்டு அரசியலுக்காக இதை நான் பேசவில்லை. விவசாய நிலங்களை அழிக்கும் அரசு நிச்சயம் மக்கள் விரோத அரசாக தான் இருக்கும். 13 ஏரிகளை அழித்து நிறைவேற்றப்பட உள்ள பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும் என பரந்தூரில் த.வெ.க தலைவர் விஜய் பேசியுள்ளார்
-
Jan 20, 2025 13:17 IST
சட்டத்திற்கு உட்பட்டு எல்லா போராட்டங்களையும் நடத்துவோம்
"பரந்தூர் விமான நிலைய திட்டத்தை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என ஒன்றிய, மாநில அரசைக் கேட்கிறேன். விவசாய நிலங்கள் இல்லாத பகுதியில் விமான நிலையத்தை அமைக்க வேண்டும். வளர்ச்சி திட்டங்களுக்காக விவசாயத்தை அழிக்கக் கூடாது”
"பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக சட்டத்திற்கு உட்பட்டு எல்லா போராட்டங்களையும் நடத்துவோம். நம்பிக்கையோடு இருங்கள், நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம், நன்றி வணக்கம்” என விஜய் பேசினார்.
-
Jan 20, 2025 13:13 IST
உங்களுடன் தொடர்ந்து நிற்பேன் - பரந்தூர் மக்களிடம் விஜய் உறுதி
உங்கள் வீட்டு பிள்ளையாக சட்டத்திற்கு உட்பட்டு உங்களுடன் உறுதியாக நிற்பேன். உங்களுடன் தொடர்ந்து நிற்க வேண்டும் என்று தோன்றுகிறது என்றார்.
முன்னதாக விஜய்யிடம் நெற்கதிரை வழங்கி, விவசாயிகள் பச்சை துண்டு அணிவித்தனர்.
-
Jan 20, 2025 12:52 IST
போராட்ட குழுவினர் மத்தியில் பேசி வரும் விஜய்
மக்களை சந்திக்க மண்படத்திற்கு வருகை தந்த விஜய் மக்கள் மத்தியில் பேசி வருகிறார்.
-
Jan 20, 2025 12:00 IST
பிரச்சார வாகனத்தில் பரந்தூர் செல்லும் விஜய்
கட்சிக் கொடி பொருத்திய பிரச்சார வாகனத்தில் விஜய் பரந்தூர் செல்கிறார். வழியில் தொண்டர்கள் திரண்டு அவருக்குஎஉற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். இன்னும் 5 அல்லது 10 நிமிடத்தில் பொடவூர் சென்றடைவார். பொடவூர் தனியார் மண்டபத்தில் மக்களை சந்திக்கிறார்.
-
Jan 20, 2025 11:54 IST
அமைச்சர் சேகர் பாபு பதில்
"விஜய் பரந்தூருக்கு செல்வது நல்லது தான், போய்விட்டு வரட்டும்" என பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினரை சந்திக்கும் விஜய் குறித்து அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
-
Jan 20, 2025 11:28 IST
பரந்தூர் - காஞ்சிபுரம் சந்திப்பு பகுதியில் போலீசார் தீவிர சோதனை
பரந்தூர் - காஞ்சிபுரம் சந்திப்பு பகுதியில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். வருபவர்கள் ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்தவர்களா என ஆய்வு செய்கின்றனர். இதுவரை 30க்கும் மேற்பட்ட வேன்களில் பொதுமக்கள் வருகை. வெளியூர் நபர்களை போலீசார் திருப்பி அனுப்பு வருகின்றனர்.
-
Jan 20, 2025 11:21 IST
மக்களுக்கு உணவு வழங்கிய என்.ஆனந்த்
த.வெ.க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உணவு பைகளை போராட்ட குழு மக்களுக்கு வழங்கிய என்.ஆனந்த் வழங்கினார்.
-
Jan 20, 2025 11:12 IST
விஜய் என்ன பேசப் போகிறார் என எதிர்ப்பார்பு
பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக போராடும் கிராம மக்களை விஜய் சந்திக்கிறார். விஜய் என்ன பேசப் போகிறார் என எதிர்ப்பார்பு அதிகரித்துள்ள நிலையில் அவரை காண மக்கள் குவிந்து வருகின்றனர். பரந்தூர் செல்லும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
-
Jan 20, 2025 11:05 IST
விஜயை காண குவியும் கூட்டம்... கூட்ட நெரிசலில் பரந்தூர் சாலைகள்
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினரை சந்திக்க விஜய் வர உள்ளதையொட்டி அவரை காண ஏராளமானோர் வருகை தர உள்ளதால் கூட்டம் அதிகரித்துள்ளது. சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
Jan 20, 2025 11:02 IST
தடுத்து நிறுத்தம் - தவெக நிர்வாகிகள் கொந்தளிப்பு
பரந்தூரில் விஜய் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற நிர்வாகிகளை காவல் துறையினர் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
-
Jan 20, 2025 11:00 IST
பரந்தூரில் குழப்பம்; ஆவணங்கள் சரிபார்ப்பு
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினரை விஜய் சந்திக்க உள்ள நிலையில் நிர்வாகிகள் அதிகமானோர் வருகை தந்த நிலையில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அடையாள ஆவணங்களை சரிபார்த்த மக்கள் அனுமதிக்கப்படுகின்றன.
-
Jan 20, 2025 10:45 IST
ஆவணங்கள் வைத்திருப்போருக்கு மட்டுமே அனுமதி
தவெக தலைவர் விஜய் சந்திப்பில் அடையாள ஆவணங்கள் வைத்திருப்போருக்கு மட்டுமே போலீசார் அனுமதி அளிக்கின்றனர்.
-
Jan 20, 2025 10:29 IST
விஜய் சந்திப்பு நிகழ்ச்சி: பொடலூர் வீனஸ் திருமண மண்டபத்தை சுற்றி போலீஸ் குவிப்பு.!
பொடலூரில் உள்ள வீனஸ் திருமண மண்டபத்தை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வளாகத்தை சுற்றி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கட்சி நிர்வாகிகள் சந்திக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் சுற்றி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
Jan 20, 2025 10:24 IST
போராட்டக்காரர்களை சந்திக்கும் விஜய்... தவெகவினர் போலீசாருடன் வாக்குவாதம்.!
கண்ணந்தாங்கல் சுங்கச்சாவாடியில் போலீசாருடன் த.வெ.க நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை மட்டுமே அனுமதிக்க முடியும் என தெரிவித்த நிலையில்விஜய் சந்திப்பு நிகழ்ச்சிக்கு தங்களையும் அனுமதிக்க கோரி நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
video credits:
போராட்டக்காரர்களை சந்திக்கும் விஜய்... தவெகவினர் போலீசாருடன் வாக்குவாதம்.!#Vijay #விஜய் #TVKVijay #ThalapathyVijay #TVK #TamilagaVetriKazhagam #தமிழகவெற்றிக்கழகம் #Parandur #ParandurAirport #ParandurProtest #Kanchipuram #TVKWithParandur #BussyAnand #NewsTamil24x7 pic.twitter.com/7iJ7p31gi4
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) January 20, 2025 -
Jan 20, 2025 09:47 IST
பரந்தூர் மக்களை சந்திக்கும் விஜய்; 4 நிபந்தனைகளுடன் அனுமதி
பாந்தூர் பசுமை விமான நிலையம் அமையயுள்ள கிராமங்களின் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் மேலும் விலைப் வெட்டிவ் ரிசார்ட்டில் உள்ள அரங்கின் கொள்ளத்தக்க அளவுக்கு மிகாமல் மட்டுமே மக்கள் பங்கேற்க வேண்டும். சட்டம் ஒழுக்கு நானைப் பேண காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். தாங்கள் பாரந்தூர் வீசைஸ் வெட்டிங் ரிசார்ட்டில் கிராம மக்களை சந்திக்கும் நேரம் தாங்கள் கேட்டுக்கொண்டபடி காலை மணிமுதல் 12.30 மணிக்குள்ளாக இருத்தல் வோண்டும். தளங்கள் மேற்குறிப்பிட்டுள்ள இடத்தில் கிராம மக்களை சந்திக்கும்போது தங்களது கட்சியினரால் அல்லது ரசிகர்களல் பொதுமக்களுக்கோ அல்லது பொதுச்சொத்திற்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் நடந்து கொள்ள வேண்டும்.
பரந்தூர் மக்களை சந்திக்கும் விஜய்; 4 நிபந்தனைகளுடன் அனுமதி pic.twitter.com/8x10IhsGrF
— Actor Vijay Fans (@Actor_Vijay) January 20, 2025 -
Jan 20, 2025 09:39 IST
நிர்வாகிகள் பங்கேற்பார்கள்
"ஏகனாபுரம் மக்களுடன் காஞ்சிபுரம் தவெக நிர்வாகிகள் பங்கேற்பார்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசாரிடம் கேளுங்கள்" என தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
-
Jan 20, 2025 09:32 IST
நீலாங்கரை இல்லத்தில் இருந்து பரந்தூர் புறப்பட்ட விஜய்
தவெக தலைவர் விஜய் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினரை சந்திக்க உள்ள நிலையில் தனியார் மண்டபத்தில் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. ஆய்வு செய்து வருகிறார்.
video credits:
#JUSTIN
— News18 Tamil Nadu (@News18TamilNadu) January 20, 2025
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவினரை சந்திக்க ஏகனாபுரம் புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்#Vijay #TVK #Parandhur #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/HKUhSv6Ipf -
Jan 20, 2025 09:29 IST
எஸ்.ஆனந்த் பேட்டி
ஒரு கட்சித்தலைவர் மக்களை சந்திக்க ஏன் இவ்வளவு Setup, கெடுபிடி என்ற கேள்விக்கு “அதை போலீஸிடம் போய் கேளுங்க” என்று தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
-
Jan 20, 2025 09:02 IST
36ஆவது நபராக விஜய் சந்திப்பு
பரந்தூர் விமான நிலைய போராட்டக் குழுவினரை 36 ஆவது நபராக விஜய் சந்தித்து ஆதரவு தெரிவிக்கிறார். விமான நிலையத்திற்கு எதிராக 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடந்த 910 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக் குழுவினரை சீமான், திருமாவளவன், பிரேமலதா விஜயகாந்த், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சோம சுந்தரம் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என இதுவரிஅ 35 பேர் சந்தித்து உள்ளனர்.
-
Jan 20, 2025 08:41 IST
ஆர்.எஸ்.பாரதி பேட்டி
"பரந்தூர் விமான நிலையம் என்பது தொலைநோக்கு பார்வையுடன் கொண்டுவரப்படும் திட்டம்" போராட்டக்காரர்களை தவெக தலைவர் விஜய் சந்திப்பது குறித்த கேள்விக்கு ஆர்.எஸ்.பாரதி பதில் அளித்துள்ளார்.
-
Jan 20, 2025 08:40 IST
வீட்டில் இருந்து புறப்பட்ட விஜய்
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவினரை சந்திக்க தனது இல்லத்தில் இருந்து விஜய் புறப்பட்டு ஏகனாபுரம் சென்றார்.
-
Jan 20, 2025 08:31 IST
என். ஆனந்த் பேட்டி
“பாதிக்கப்பட்ட இடத்திலேயே மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும் என்பதே தலைவரின் எண்ணம்” பரந்தூர் போராட்டக்காரர்களை விஜய் சந்திக்கும் இடம் குறித்து நீடித்த சர்ச்சை பற்றி தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் பேட்டி அளித்துள்ளார்.
-
Jan 20, 2025 07:49 IST
விஜய் நிகழ்ச்சிக்கு 4 நிபந்தனைகளுடன் அனுமதி
பரந்தூர் விமான நிலையம் அமையவுள்ள கிராமங்களின் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும். சட்டம் ஒழுங்கைப் பேன காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். திட்டமிட்டபடி காலை 11.30 மணி முதல் 12.30 மணிக்குள் நிகழ்ச்சியை நடத்தி முடிக்க வேண்டும். பொதுமக்களுக்கோ, பொதுச்சொத்திற்கோ பாதிப்பு ஏற்படாத வகையில் நடந்துக்கொள்ள வேண்டும்.
-
Jan 20, 2025 07:40 IST
விஜய் பரந்தூர் சந்திப்பு
த.வெ.க. தலைவர் விஜய் ஏகனாபுரத்தில் இன்று மக்களை சந்திக்கிறார். பொடவூரில் உள்ள தனியார் மண்டபத்தில் சந்திப்பு நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளது. மக்களை விஜய் சந்திக்கும் நிகழ்வு தொடர்பாக பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. மக்களை சந்திப்பது மட்டுமே குறிக்கோள் என விஜய் கூறியதாக ஆனந்த் தகவல் தெரிவித்துள்ளார்.
-
Jan 20, 2025 07:37 IST
பிற்பகல் 12 -1 விஜய் சந்திப்பு
பிற்பகல் 12 முதல் 1 மணிக்குள் பரந்தூர் கிராம மக்களை விஜய் சந்திக்க உள்ளதாக தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் பேட்டி அளித்துள்ளார்.
-
Jan 20, 2025 07:30 IST
இன்று பரந்தூர் செல்கிறார் விஜய்
விமான நிலையத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் மக்களை சந்திக்க இன்று தவெக தலைவர் விஜய் பரந்தூர் செல்கிறார். பொடவூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் போராட்டக்குழுவினரை விஜய் சந்திக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.