/indian-express-tamil/media/media_files/2025/09/27/ajith-vijay-photo-2025-09-27-13-55-37.jpg)
Vijay Namakkal campaign Karur rally TVK campaign Vijay Ajith photo
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், இன்று (செப்டம்பர் 27) நாமக்கல் மற்றும் கரூரில் முக்கியப் பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்து சேர்ந்தார். திருச்சியில் இருந்து காரில் புறப்பட்ட அவர், எம்.களத்தூர் சென்றடைந்து, அங்கு அவருக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தவெக பிரச்சார வாகனத்தில் ஏறி, நாமக்கலை நோக்கி சாலை மார்க்கமாகப் பயணித்து வருகிறார்.
ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை:
நாமக்கலில் உள்ள கே.எஸ். திரையரங்கம் பகுதியில் விஜய் பிரச்சாரம் செய்ய இருப்பதால், அப்பகுதியில் ஏராளமான தொண்டர்கள் காலை முதலே குவிந்தனர்.
இது ஒருபுறமிருக்க, திருச்சி - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விஜய்யின் பிரச்சார வாகனத்தைப் பின்தொடர்ந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டுள்ளனர். பெரும்பாலானோர் இருசக்கர வாகனங்களில், எந்தவித சாலை விதிகளையும் முறையாகப் பின்பற்றாமல் விஜய்யை நெருங்கிச் சென்றதால், சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அஜித் ரசிகரை ஆச்சரியப்படுத்திய விஜய்:
பிரியமுடன்
— Praveen TVK (@its_PraveenRam) September 27, 2025
விஜய் ❤️💯🥹#ThalaThalapathy 💯🫂❤️#உங்கவிஜய்_நா_வரேன்#உங்கள்_விஜய்_நா_வரேன்#தமிழகவெற்றிக்கழகம்#TVKForTN#TVKVijay#TVKCampaign#JanaNayaganpic.twitter.com/QjqHwUkR5D
இந்தக் கூட்ட நெரிசலுக்கு நடுவே, எதிர்பாராத ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு நடந்தது. விஜய்யின் பிரச்சார வாகனத்திற்கு அருகே வந்த ஓர் அஜித் ரசிகர், தான் வைத்திருந்த விஜய் - அஜித் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்பட பிரேமை (Photo Frame) வாகனத்தில் இருந்த விஜய்யிடம் அளித்தார்.
அன்புடன் அதைப் பெற்றுக்கொண்ட விஜய், அந்த புகைப்பட பிரேமில் தனது ஆட்டோகிராஃபைப் போட்டு, மீண்டும் அந்த ரசிகரிடமே திருப்பிக் கொடுத்தார். இந்தச் சம்பவம் அந்த ரசிகரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதுடன், இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி காட்டுத் தீயாகப் பரவி வருகிறது.
இதற்கிடையில், சாலையின் இருபுறமும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கட்டுக்கடங்காமல் கூடியதால், விஜய்யின் பிரச்சார வாகனம் நகர முடியாமல் திணறியது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை சார்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், எதிர்பாராத மக்கள் வெள்ளத்தால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.